1.1. துல்லியமாக இருத்தல்


வரைவிலக்கணங்கள் மற்றும் உதாரணங்கள்: குழுக்குறி (jargon) மற்றும் சிக்கலான பதங்களை உங்களது வாசகர்களுக்காக வரைவிலக்கணப்படுத்துங்கள். அத்துடன் செய்தி முழுவதும் அதே வரைவிலக்கணத்தைப் பின்பற்றுங்கள். அத்துடன், சுருக்கத்தை உதாரணங்கள் மூலம் திடமாக்குங்கள்.

நிரூபிக்கப்படாத பொதுமையாக்கம் (generalization): பெரும்பாலாக, பல, சில, அல்லது ஒரு சில போன்ற வார்த்தைகளின் பொருளை விளங்குவதுடன் அவற்றுக்கு இடையான வேறுபாட்டையும் விளங்கிக் கொள்ளுங்கள். அவற்றை பொருத்தமாக வேறுபடுத்துங்கள். “பெரும்பாலாக” மற்றும் “பல” என்ற வார்த்தைகளுக்கு இடையான வேறுபாடு தொடர்பில் மிகக் கவனமாக இருப்பதுடன் “அனைத்தும்” அல்லது “ஒன்றுமில்லை” ஆகிய வார்த்தைப் பிரயோக வேறுபாடு தொடர்பில் மிக மிகக் கவனமாக இருந்து கொள்ளுங்கள். “காரணம்” மற்றும் “காரணங்களில் ஒன்று” என்பவை இடையே வேறுபாடு உள்ளதா? “எப்போதும்” மற்றும் “அடிக்கடி”, எது பொருத்தமானது? பொதுவான விடயங்களை உறுதி மிக்க நிகழ்ச்சிகளை காண்பித்து குறிப்பனவையாக மாற்றுவதுடன் தனி நபர்களை பெயர் கொண்டு குறிப்பிடுங்கள்.

துணை புரியும் விவாதங்கள்: அனைத்து வாக்குமூலங்களுக்கும் உறுதியான விபரங்களை கவனமாக துணையாக மாற்றுங்கள். ஒரு எண்ணக்கருவை விமர்சிக்கும் வேளை தனி நபர் ஒருவரைத் தாக்க வேண்டாம். உண்மைகள் மற்றும் விவாதங்களை கலந்துரையாடுவதை தொடர்ச்சியாக மேற்கொள்ளுங்கள். வழங்கப்பட்ட சலுகைகள் நோக்கத்துடனான செயற்பாடு அல்லது செயற்படாமல் இருக்க காரணமாக அமைந்ததா என்பதை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டுவிடுங்கள். சிலவேளைகளில் உங்களது செய்தி தொடர்பில் தெளிவாக இருக்கும்படி காண்பிக்க மற்றும் சொல்ல வேண்டி ஏற்படும் (அத்துடன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அர்த்தங்களைக் கொள்ளாமல் இருப்பதற்காக). உங்களது செய்தியை சுருக்கத்தை வழங்கும் வசனம் ஒன்றுடன் நிறைவு செய்யுங்கள்.

அதிகாரசபைகளை சான்றாகக் குறிப்பிடுதல்: நன்மைகள் மற்றும் தீமைகளைப் பட்டியலிடுங்கள், அத்துடன் அவற்றை நடுநிலையான முறையில் கையாளுங்கள். அதிகார சபையின் செயற்பாடுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களில் கவனக் குவிவைக் கொண்டிருப்பதும் முக்கியமானது. சிலர் சில விடயங்களை ஏன் கூறினார்கள்? பின்புல ஆய்வு மற்றும் கூற்றுக்கள் தொடர்பில் உதவியைப் பெற தொடர்புடைய பல தகவல் மூலங்களுடன் உரையாடுங்கள், வெறுமனே ஒன்றுடன் மாத்திரம் அல்ல.

முற்கோள் (prejudice), படி வார்ப்புகள் (stereotypes) அல்லது உணர்ச்சிகள்:
படி வார்ப்புகள், அவை நேர்மறையானதாக அல்லது எதிர்மறையானதாக இருப்பினும் அவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களது மொழி நடையை நடுநிலையாக வைத்திருப்பதுடன் உங்களது அனைத்து தகவல் மூலங்கள் மற்றும் விடயதானங்களையும் ஆரோக்கியம் மிக்க ஒரேயளவான சந்தேகத்துடன் நோக்குங்கள். நீங்கள் சொல்லும் விடயங்களுக்கு சான்றுகளைக் காண்பியுங்கள். ஒற்றையான முடிவுக்கு கொண்டுவரும் சான்றை விட ஆதாரங்களின் அளவின் அடிப்படையில் துல்லியமான சந்தேகமற்ற புலனாய்வு செய்திகள் எழுதுவதற்கு சாத்தியமானது. எனினும், உங்களால் கண்டு பிடிக்க முடியுமாயின் ஆதாரங்களே (proof) சிறந்தவை. எனினும் திடமாக இணைக்கப்பட்ட ஆதாரங்கள் சான்று மேற்கொள்ளும் அதே பணியின் பெரும்பகுதியை மேற்கொள்ளக் கூடியன. உங்களிடம் அதிகமான ஆதாரங்கள் காணப்படும் வேளை அவற்றை இறுக்கமானதாகவும் தெளிவானதாகவும் ஆக்குங்கள், இதை சிலவேளைகளில் உங்களது தகவல் மூலங்களாய் மீளத் தொடர்பு கொண்டு பிரச்சனைகளை விபரமாக அவற்றிடம் இருந்து பெறுவதன் மூலம் மேற்கொள்ளலாம். அத்துடன் நீங்கள் ஒரு சிறப்பான சூழமைவை கட்டி எழுப்ப வேண்டி வரலாம். அது உங்கள் வாசகர்கள் என்ன சூழலில் செயற்பாடுகள் மற்றும் பின்விளைவுகள் இடம்பெற்றன என்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள உதவும். அத்துடன் நீங்கள் குற்றம் சாட்டும் விடயங்களுடன் தொடர்புடைய நபர்கள் அவற்றில் ஈடுபட வழிகள், நோக்கங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் காணப்பட்டனவா என அறிந்து கொள்ள தேவையான தகவல்களை வழங்கும்.