1.1. புலனாய்வு ஊடகவியலாளர்கள் துப்பறிவாளர்களா?


துப்பறிவாளர்கள் பயன்படுத்தும் திறன்களை கருத்தில் கொள்ளும்போது இதற்கான விடை ஆம் என்பதே ஆகும், ஊடகவியாளர்கள் துப்பறிவாளர்களே. அனைத்து புலனாய்வுச் செய்திகளும் கேள்வி ஒன்றுடனேயே ஆரம்பமாகின்றன. ஊடகவியலாளர்கள் இந்த கேள்வியை ஆராய்ந்து அதன் விடை மற்றும் அதன் சமூகப் பொருள் தொடர்பில் கருதுகோள் ஒன்றை உருவாக்குவர். அவன் அல்லது அவள் அது தொடர்பில் மேலதிக ஆய்வை மேற்கொள்வார்: அது தொடர்பான தொடர்ச்சியான பத்திரிகைச் செய்திகளை பின்பற்றுதல், சிலவேளைகளில் விசாரணைகள் போல் தோற்றமளிக்கும் நேர்காணல்களை மேற்கொள்ளல் அத்துடன் ஆதாரங்களின் தொகுதி ஒன்றினை ஒன்றிணைத்தல் என்பன இந்த மேலதிக ஆய்வில் உள்ளடங்குகின்றன. இந்த ஆதாரங்களில் சில மிகவும் விபரமானவையாகவும் தொழில்நுட்ப ரீதியானதாகவும் காணப்படும்.

ஊடகவியலாளர்கள் செல்லுபடியான சான்று அத்துடன் அது முழுமையான ஆதாரம் என்பவற்றைக் கொண்டுள்ளனவா எனத் தீர்மானிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களை (நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுவை போன்ற) பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இங்கு நிந்திப்பு போன்ற அவதூறு தொடர்பான சட்டங்கள் அமுலில் உள்ளன. எனவே ஊடகவியலாளரின் விசாரணை மற்றும் தகவல்களைப் பரிசோதித்தல் என்பன துப்பறிவாளர் ஒருவர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு ஒழுங்குபடுத்தும் விதத்தில் இருந்து மாறுபடக் கூடாது.

சிலவேளைகளில் கேட்கப்பட வேண்டிய கேள்வியானது ஊடகவியலாளர்கள் மறைமுகமாகச் செயற்படுதல் மற்றும் மறைக்கப்பட்ட ஒலிப்பதிவுக் கருவி, கமராக்கள் போன்ற நுட்பங்களை பயன்படுத்துதல் உட்பட துப்பறிவாளர்கள் போன்று நடந்து கொள்வது சரியானதா என்பதாகும். இதற்கான விடை மிகவும் சிக்கல் வாய்ந்ததாகும். மிகவும் தலை சிறந்த புலனாய்வு ஊடகவியலாளர்கள் உட்பட புலனாய்வு ஊடகவியலாளர்கள் இவ்வாறான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும் துப்பறிவாளர் ஒருவரின் இரகசியச் செயற்பாடு மற்றும் பொலிசாரினால் புலனாய்வுக்கு உட்படுத்தப்படும் குடிமக்களின் உரிமைகள் என்பன வழமையாக சட்டத்தின் சட்டக வடிவமைப்பினால் ஆட்சிக்கு உட்படுத்தப்படுகின்றன என்பது இங்கு நினைவு கூறத்தக்கதாகும். ஊடகவியலாளர்கள் தமது சொந்த பணி ஒழுக்கத்தில் தங்கியிருப்பதுடன் அவர்கள் அந்தரங்கம் தொடர்பான சட்டங்களில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் அல்ல. எனவே ஒழுக்கமான ஊடகவியல் மற்றும் குற்றம் சாட்டப்படுதில் இருந்து தவிர்ந்து கொள்ளல் என்பவற்றுக்காக ஊடகவியலாளர்கள் இவ்வாறாக செயற்படு முன்னர் ஒவ்வொரு சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மறைக்கப்பட்ட கமராக்கள் மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகள் என்பன சான்றுகளின் மூலங்களாகப் பயன்படுமே அன்றி அவை அந்த சான்றினை பகுப்பாய்வு செய்தல், சான்றினை சூழமைவுக்கு உட்படுத்தல் மற்றும் பொருள் பொதிந்த செய்தி ஒன்றினை உருவாக்குதல் என்பவற்றுக்கு மாற்றீடாகப் பயன்படுத்த முடியாதன ஆகும். உங்களுக்கு எங்கே தேட வேண்டும் மற்றும் எவ்வாறு அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அறிவு இருப்பின் உங்களுக்கு அனைவராலும் அணுகக்கூடிய பொது ஆவணங்களில் பாரிய அளவிலான சான்றுகள் காணப்படுகின்றன.

துப்பறிவாளர்கள் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் பல வழிகளில் ஒருவருக்கொருவர் ஒத்தவராகக் காணப்பட்ட போதும் அவர்கள் வேறுபட்ட பணிகளையும் புரிகின்றனர். சிலவேளைகளில் புலனாய்வு ஊடகத்துறையின் நோக்கம் எவரையும் குற்றவாளிகளாக நிறுவுவதாக அன்றி சாட்சிகளைப் பெறுவதாகும். யார் குற்றத்தை புரிந்துள்ளனர் என துப்பறிவாளர்கள் நிஷரூபித்ததுடன் அவர்களின் பணி முடிவடைகின்றது. எனினும் புலனாய்வு ஊடகவியலாளர்களின் பணி விடையைக் கண்ட பின்னரும் மேலும் தொடருகின்றது. அது சரியான யதார்த்தங்களைத் தேடுவதுடன் யதார்த்தங்களை சரியாக்குகின்றது. அது செய்தியின் பொருளை வெளிக்கொண்டு வருவதுடன் நிகழ்வுகள், செயற்பாடுகள் மற்றும் சான்றுகளின் போக்கை காட்டுகின்றது. இதனூடாக, புலனாய்வுச் செய்திகள் குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டிக்காட்டுவதை விடுத்து பிரச்சனை ஒன்றின் சூழமைவு மற்றும் நுணுக்கங்களை விளக்குகின்றன. இந்த அளவுக்கு ஆழமான நிலை நோக்கி தமது பணிகளை நகர்த்துவதன் மூலம் புலனாய்வு ஊடகவியலாளர்கள் தமது நோக்கங்கள் தொடர்பில் எழும் கரிசனைகளைக் குறைக்க முடியும்.

நிச்சயமாக “சீற்றத்தை ஏற்படுத்தும் ஊடகவியல்” என அழைக்கப்படும் புலனாய்வு அறிக்கையிடல் செய்தி ஒன்றின் மீது செயற்கையாக ஏற்படுத்தப்படும் இருதரப்பு சமநிலை நோக்கி பயணிப்பதில்லை. மாறாக சமர்ப்பிக்கப்படும் செய்தி மீதான நிச்சயத் தன்மை மீதே இந்த நடவடிக்கை கரிசனை கொண்டுள்ளது. இங்கு “நாங்கள் இங்கு பிழையாக இருக்கக் கூடும்” அல்லது “நாங்கள் தவறான விளக்கங்களை தந்திருக்கக் கூடும்” போன்ற மழுப்பல்கள் இருக்கக் கூடாது. இவ்வாறான சந்தேகங்கள் காணப்படின் குறித்த புலனாய்வு போதிய அளவு ஆழமானது அல்ல அத்துடன் குறித்த செய்தி பிரசுரிக்க தயார் நிலையில் காணப்படவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். ஒரு செய்திக்கு இரண்டு பக்கங்கள் மாத்திரம் காணப்படுவதில்லை. அத்துடன் நடுநிலையான புலனாய்வுச் செய்தி அவ்வாறான பல பக்கங்களை விளக்குவதுடன் என்ன நடந்தது என்பது மாத்திரமன்றி அது ஏன் நடந்தது என்ற விடயத்தையும் கொண்டிருக்கும். ஒரு துப்பறிவாளர் விடயம் ஒன்றின் தடுக்கும் சூழ்நிலைகளை பற்றிய விளக்கங்கள் வழங்கப்படுவதை விடயத்தை சார்ந்து வாதிடும் வழக்கறிஞ்சரின் பொறுப்பில் விடுவார் எனினும் ஒரு புலனாய்வு ஊடகாவியலாளர் விடயத்தின் ஒட்டுமொத்த சூழமைவை விளக்குவார்.

வேறொரு வகையில் புலனாய்வு ஊடகவியலாளர்கள் விஞ்ஞானிகள் போன்று செயற்படுகின்றனர். செய்தி ஒன்றுக்கு போதிய அளவு சான்றுகளைத் திரட்டும் வரை திறந்த மனப்பாங்கைக் கடைப்பிடிப்பது அவர்களது முறைமைகளுக்கு அவசியமாகின்றது. இதன் கருத்து முரண்படும் சான்றுகளைப் புறக்கணிக்காமை அத்துடன் சான்றுகள் வேறொரு திசையை சுட்டிக்காட்டுமிடத்து முடிவுகளை மாற்றுவதற்கு தயாராயிருத்தல் என்பனவாகும். இந்த அனைத்து வழிவகைகளிலும் ஊடகவியலாளரின் பணி ஆய்வாளர்கள் கருதுகோள் ஒன்றை முன்வைத்து அது உண்மையா இல்லையா என்பதை பரிசோதிக்கும் செயன்முறைக்கு ஒப்பானதாகும்.

புலனாய்வு ஊடகவியலாளர்கள் முகாமையாளர்களாகவும் செயற்படுகின்றனர். ஆழமான ஆய்வு செயன்முறையக் கொண்ட பாரிய மற்றும் நீண்ட கால செயல் திட்டங்களில் இந்த ஊடகவியலாளர்கள் ஏனைய குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார் வல்லுனர்களுடன் வரையப்பட்ட செய்தி திட்டமிடலுக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும். பாரிய மற்றும் நீண்ட கால திட்டங்களில் பணியாற்ற இந்த தனி நபர்கள் குழுச் செயற்பாடு மற்றும் தொடர்பாடல் என்பவற்றில் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.