3. எவ்வாறு ஒரு சிறந்த புலனாய்வு ஊடகவியலாளராக வருவது (இருப்பது)?

3. எவ்வாறு ஒரு சிறந்த புலனாய்வு ஊடகவியலாளராக வருவது (இருப்பது)?


உணர்வுபூர்வம்

புலனாய்வு ஊடகவியலாளர் எவிலீன் க்ரோநின்க் (Evelyn Groenink) ஐப் பொறுத்த வரை உணர்வுபூர்வம் என்பதே மிகவும் முக்கியமான இயல்பாகும்: “அநேகமான புலனாய்வு ஊடகவியல் நடவடிக்கைகள் நன்றியற்ற பணிகளாகும், நேரம் மற்றும் பணம் என்பன அதிகளவில் தேவைப்படும். அது உங்களது பத்திரிகை ஆசிரியரை பொறுமை இழக்கச் செய்வதோடு அதிகாரம் உள்ளவர்கள் உங்களை தொந்தரவாகக் கருதுவர். ஒழுங்கான பதவி உயர்வுகளுடன் நிலையான வருமானம், உங்களது ஆழ்மனதின் விருப்பம் பொருத்தமான சம்பளத்துடன் ஒரு முகாமைத்துவப் பதவி நிலை, உங்களது சமூகத்தின் முக்கிய நபர்களினால் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுதல் போன்றவற்றை விரும்புபவராக நீங்கள் இருப்பின் அனேகமாக புலனாய்வு ஊடகத்துறை உங்களுக்கு பொருத்தமான ஒன்றல்ல. எனினும் நீங்கள் சவால்களை அனுபவிக்க விரும்புபவராக, உண்மை மற்றும் நீதி தொடர்பில் உணர்வு பூர்வமானவராக அத்துடன் உங்களது வாசகர் வட்டத்துக்கு முக்கியமான செய்திகளை வழங்க விருப்பம் உள்ளவராக இருப்பின் எவ்வளவு நேரம் மற்றும் சக்தி தேவைப்படினும், சில அதிகாரம் உள்ள நபர்கள் உங்களை விரோதிகளாக நோக்கினாலும் எல்லா வழிகளிலும் புலனாய்வு ஊடகத்துறை நோக்கி நகருங்கள்”

ஆர்வம்

கேள்விகளைக் கேட்பதில்தான் புலனாய்வு ஊடகத்துறை ஆரம்பமாகின்றது. இந்த கேள்விகள் செய்திகளில் இடம்பெறும் நிகழ்வுகள் பற்றியோ அல்லது உங்களது நாளாந்த வாழ்வில் நீங்கள் பார்க்கின்ற மற்றும் கேட்கின்ற விடயங்கள் பற்றியோ இருக்கலாம்.

முன்னெடுப்பு

அநேகமான செய்தி அறைகள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் நெருக்கடியான கால எல்லைகள் என்பவற்றுடனேயே இயங்குகின்றன. எனவே செய்தியாளர் மாநாட்டில் கூறப்படும் புலனாய்வு யோசனை ஒன்று குறிப்பாக அது தகவல் செறிவு அற்றதாக மற்றும் தெளிவற்றதாக இருப்பின் உடனடியாக மேற்கொள்ளப்படுவதில்லை. புலனாய்வு ஊடகவியலாளர்கள் தமது சொந்த முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். தமது சொந்த ஆரம்ப ஆய்வை மேற்கொண்டு செய்தி யோசனையை ஒரு திடமான செய்தித் திட்டமாக மாற்றியமைக்க வேண்டும். செய்தி அறை இன்னும் அந்த விடயம் தொடர்பில் அக்கறை காட்டாத விடத்து தமது பணிக்குரிய ஆதரவை (புலனாய்வு நிதியுதவி போன்றன) அடையாளம் காண வேண்டிய மேலதிக முன்னெடுப்பு அவசியமாகலாம்.

தர்க்க ரீதியான சிந்தனை, ஒழுங்கமைப்பு மற்றும் சுய ஒழுக்கம்

புலனாய்வு அறிக்கையிடல் நேரத்தை எடுக்கக் கூடியது மற்றும் அது சட்ட ரீதியான அபாய நேரிடரை கொண்டுள்ளதாலும் மிகவும் நுட்பமான சரிபார்த்தல் அவசியமாகின்றது. எனவே உங்களது நேரத்தை மிகச் சிறந்த வகையில் உபயோகிக்க நீங்கள் கவனம் மிக்க திட்டமிடுபவராகவும் தகவல்களை சோதனை செய்தல் மற்றும் மீள் சோதனை செய்தலை மேற்கொள்ளக் கூடியவராகவும் இருப்பதுடன் செய்தி ஒன்றாகப் பொருந்துவதை உறுதி செய்பவராகவும் இருக்க வேண்டும்.

நெகிழ்வுத்தன்மை

ஒரு புலனாய்வு எதிர்பாராத திருப்பங்களை தரக்கூடும். சிலவேளைகளில் முதலாவது கேள்வி ஒரு தொடர முடியாத நிலைக்கு அல்லது மிகவும் சுவாரசியம் வாய்ந்த விடயத்துக்கான கதவை குறைந்த யதார்த்தமுள்ள கேள்வி மூலம் திறக்கலாம். புலனாய்வு ஊடகவியலாளர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது ஆரம்ப யோசனைகளில் இருந்து விலகி மீள்சிந்தனை மற்றும் தமது ஆய்வை மீள வடிவமைத்தல் ஆகியவற்றுக்கு தயாராக இருத்தல் வேண்டும்.

குழு உணர்வு மற்றும் தொடர்பாடல் திறன்கள்

திரைப்படங்கள் அனேகமாக புலனாய்வு நிருபர் ஒருவரை தனித்து சாகசம் புரியும் “தனித்த ஓநாய்” போன்றே காண்பிக்கின்றன. சிலவேளைகளில் இரகசியம் பேணுதல் மிக முக்கியமாக இருப்பதன் காரணமாக குறிப்பிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட முன்னர் செய்தி ஏனையவர்களுடன் பகிரப்பட முடியாத நிலை தோன்றலாம். எனினும் அநேகமான சிறந்த செய்திகள் செய்தி அறையின் அனைத்து திறன்களையும் (வெளியில் இருந்து கூட) பயன்படுத்தும் கூட்டுறவு முயற்சிகளின் மூலமே கிடைக்கின்றன. உதாரணமாக கத்தோலிக்க பாதிரிமார்களால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் து~;பிரயோக சம்பவங்களை புலனாய்வு செய்த “ஸ்பொட்லைட்” வெற்றிகரமான பணியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஒரு புலனாய்வு செய்திக்கு அறிவியல், சுகாதாரம், பொருளியல் மற்றும் சமூகவியல் உள்ளிட்ட பல துறை அறிவு தேவைப்படலாம். எந்த ஒரு ஊடகவியலாளரும் அவரது அறிவு எவ்வளவு பரந்ததாக இருப்பினும் இந்த அனைத்து துறைகளிலும் அவரால் முழுமையான அறிவைக் கொண்டிருக்க முடியாது. சிறந்த தொடர்புகள் மற்றும் வலையமைப்பு என்பன இந்த குழுப்பணியை உருவாக்க முடியும். சிறந்த தொடர்பாடல் இன்னொரு பகுதியை உருவாக்குகின்றது, இதன் மூலம் குழு செய்தியின் நோக்கம் மற்றும் அந்த செய்தியில் பங்களிக்கும் அனைவரும் எதிர்பார்க்கும் அதன் நியமங்கள் (சரியான, உள்ளார்ந்த மற்றும் இரகசியமான) என்பவற்றை குழு புரிந்து கொள்வதை உறுதி செய்கின்றது.

சிறப்பாக விருத்தி அடைந்த அறிக்கையிடல் திறன்கள்

இதன் பொருள் அவர்கள் ஊடகத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, தகவல் மூலங்களை எவ்வாறு அடையாளம் காண்பது, செய்தி ஆய்வைத் திட்டமிடல், சிறந்த நேர்காணல்களை நடத்துவது (விடை ஒன்று உண்மையைக் கூறவில்லை என்பதை உணர்வது) அத்துடன் செய்தியை தகவல் செறிவுடன் சரியாக எழுதுவது போன்றவற்றில் போதியளவு பயிற்சி மற்றும் அனுபவத்தைக் கொண்டிருத்தலையே குறிக்கின்றது. மேலதிகமாக ஊடகவியலாளர்கள் எப்போது தமது ஆழத்தில் இருந்து விலகுகிறார்களோ அந்த சமயத்தில் உதவி அல்லது ஆலோசனையைக் கோர தயங்கக் கூடாது. நீங்கள் சார்பளவில் குறைந்த அனுபவம் வாய்ந்தவராக இருப்பின் சிறந்த குழுப்பணி ஏனையோரின் திறன்களை எதிர்பாராத விடயங்கள் இடம்பெறும் போது பயன்படுத்த உதவும்.

பரந்த பொது அறிவு மற்றும் சிறந்த ஆய்வுத் திறன்

புலனாய்வின் சூலமைவைப் புரிந்து கொள்ளல் தொடர்புடைய யதார்த்தங்கள் மற்றும் கேள்விகளை அடையாளம் கொள்வதன் மூலம் புலனாய்வை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத புள்ளிகளை அடைதலை தவிர்க்க உதவும். எனினும் புலனாய்வுகள் பரிச்சியமில்லாத பிரதேசத்தை நோக்கி நகருமாயின் ஊடகவியலாளர்கள் விரைவாக அந்த பிரதேசத்தின் பின்புலம், மரபுகள், மொழிவழக்கு, தொழில்நுட்பம், வகிபாகன்களைக் கொண்டிருப்போர் மற்றும் அங்குள்ள பிரச்சனைகள் தொடர்பில் விரைவாக பரிச்சியமாகிக் கொள்ள வேண்டும். ஒரு துறைசார் வல்லுனருடன் தகவல் செறிவு மிக்க கலந்துரையாடலை மேற்கொள்வது, தேடு பொறிகளைப் பயன்படுத்துவது அல்லது பயன்மிக்க புத்தகங்களை கண்டறிவது மற்றும் அவற்றை வாசிப்பது போன்ற அனைத்தும் இங்கு முக்கியமானவை. அனைத்துக்கும் மேலாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்தையும் வாசிக்க வேண்டும். ஒரு சிறிய பின்புலம் செய்திக்கு நன்மைகளை ஏற்படுத்தலாம்.

நேர்மை மற்றும் உறுதியான ஒழுக்கம்

புலனாய்வு செய்திகள் தகவல் மூலங்களின் பாதுகாப்பு, வேலை மற்றும் அவர்களின் உயிர்களுக்குக் கூட அபாயத்தை ஏற்படுத்தலாம். அசட்டையான குற்றச் சாட்டுகள் மேற்கொள்ளப்படும் போது அவர்களின் விடயதான நபர்களும் அபாயத்தில் தள்ளப்பட வாய்ப்புகள் உண்டு. எனவே புலனாய்வு நிருபர் தமது தகவல் மூலங்கள் மற்றும் விடைதான நபர்களை மரியாதையுடன் நடத்துவதுடன் அவர்கள் முடிந்தவரை பாதுக்காக்கப்பட உறுதியான, ஆழ்ந்த சிந்தனை மிக்க தனி நபர் ஒழுக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக புலனாய்வுச் செய்திகளுக்கு ஆதரவு வழங்கும் செய்தி அறைகள் ஒழுக்கக் கோவைகளினால் வழிநடத்தப்படுவதுடன் ஒழுக்கம் தொடர்பான மயக்க நிலைகளை கலந்துரையாடி தீர்த்து வைக்க தொடர் செயன்முறை ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். சிலவேளைகளில் பொது மக்களின் உங்கள் மீதான நம்பிக்கையே உங்களின் சிறந்த பாதுகாப்பாகும். நீங்கள் ஒழுக்கமின்றி நடக்கும் போது இந்த நம்பிக்கை இழக்கப்படுகின்றது.

சுயாதீனம்

வதந்திகள் சிறந்த புலனாய்வு அறிக்கைகளை உருவாக்காது. அர்த்தமற்ற கதைகள் புலனாய்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்களின் உயிர்களை அபாயத்தில் தள்ளிவிடலாம். மேலதிகமாக அவை உங்களது வர்த்தக போட்டியாளர்களை அருட்டி விடலாம். இதன் மூலம் அவர்கள் செய்தியை முன்னமே பிரசுரிக்க அல்லது நீங்கள் நேர்காணல் செய்ய இருக்கும் நபருக்கு தகவல்களை நீங்கள் அவருடன் பேசுவதற்கு முன்னமே தகவல்களை வழங்கி நேர்காணல்களை திசை திருப்பவும் வாய்ப்புகள் உண்டு. அதிகமாகப் பேசுதல் பல வழிகளில் உங்களது செய்தியை குழப்ப வாய்ப்புகள் உண்டு.

குடித்துவம்

புலனாய்வு ஊடகவியலாளர்கள் அடிக்கடி தேசவிரோதிகள் என கூறப்படுவதுண்டு. எனினும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் பொது நலன் தொடர்பான தமது கரிசனை காரணமாக ஊக்கத்துடன் தமது சமூகங்களின் நன்மைக்கு துணை புரியும் செய்திகள் தொடர்பில் பணி புரிகின்றனர்.


இந்த அத்தியாயம் புலனாய்வு ஊடகத்துறையை வரையறுத்துள்ளதுடன் பொது நலன் தொடர்பில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியுள்ளது. அத்துடன் புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கு தமது புலனாய்வு செய்திகள் தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்களை சம்மதிக்க வைத்து அவர்களின் ஆதரவைப் பெறுவது இலகுவான காரியம் அல்ல என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. இது செய்தியின் புலனாய்வு கண்டுபிடிப்புகள் எவ்வளவு நம்பிக்கை தரக்கூடியன என்பதிலேயே தங்கியுள்ளது. எனவே, எதிர்வரும் அத்தியாயாம் ஒரு செய்தி ஒன்றை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் நீங்கள் தவறான தகவல்கள் துணுக்குகள் மற்றும் ஊகங்களை எவ்வாறு பின்பற்றாமல் இருப்பது போன்ற விடயங்களைக் கலந்துரையாடும்.