1.3. துப்புகளை (tip-offs) மீளாய்வு செய்தல்


துப்புகளை வெளிக்கொண்டு வரும் அதிகமான செய்திகள் துப்பு ஒன்றின் மூலமே ஆரம்பமாகின்றன. உதாரணமாக, பொலிஸ் நிலையத்தில் உள்ள உங்களது தொடர்பு நபர் ஒருவருக்கு பொலிஸ் ஆணையாளர் ஒருவருடன் தொடர்புடைய கார் திருடும் கும்பல் பற்றி தெரிந்திருக்கக் கூடும்; பழிவாங்கும் எண்ணமுள்ள முன்னாள் வாழ்க்கைத் துணை ஒருவர் தனது முன்னாள் கணவர் மேற்கொள்ளும் வரி ஏய்ப்பு பற்றி தான் வாசிக்கும் பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கக் கூடும்; ஒரு அரசியல்வாதி நண்பரான பத்திரிகை ஆசிரியருக்கு அரச ஒப்பந்தம் ஒன்றுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் ஒன்றுக்கும் விண்ணப்பங்களை பரசீலிக்கும் குழுவில் உள்ள அதிகாரி ஒருவருக்கும் இடையான முன்விரோதம் பற்றி கூறக் கூடும்.

எனினும் இந்த தகவல்கள் மேலோட்டமாக இவைதான் அனைத்தும் என தெரிந்த போதும், அது அவ்வாறல்ல. இவை பொய்யானவையாக அத்துடன் ஒருவரை மாட்டி விடும் வகையில் சோடிக்கப்பட்டவையாக இருக்கக் கூடும். சிலவேளைகளில் இவை வேறொருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட, பகுதியளவில் உண்மையானதாக இருக்கக் கூடும். அத்துடன் உண்மையோ பொய்யோ, உங்களது அறிக்கையிடல் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவும் இருக்கக் கூடும். துப்பு ஒன்றுடன் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல் பணி அதனை கேள்விக்கு உட்படுத்துவதாகும்;

  • இந்த துப்புக் கிடைக்காவிடினும் இது நான் எழுதியிருக்கக் கூடிய விடயமா?
  • இந்த தலைப்பு தொடர்பில் எனக்கு ஆர்வம் உண்டா?
  • இங்கு வெளிக்கொணரப்பட இருக்கும் உண்மை பொதுமக்கள் நலன் தொடர்பானதா?
  • குறித்த துப்பு தருபவருக்கு இதனால் ஏற்படும் நன்மை என்ன?

கிடைக்கபெற்ற தகவல் உறுதிப்படுத்தப்பட முடியுமாயின், உதாரணங்களில் தரப்பட்ட விடயங்களில் பொலிஸ் ஆணையாளர் மற்றும் அவருடன் தொடர்பு பட்ட கார் திருட்டுக் கும்பலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது தொடர்பில் உங்களது விடை, ஆம்…. ஆம்… மற்றும் ஆம் என்பதாகவே இருக்கும்.


ஊழல் – நாணயத்தின் இரு பக்கங்களை கொண்ட தலைப்பு

எனினும் வரி ஏய்ப்பு செய்யும் ஒப்பந்த பரிசீலனைக் குழு உறுப்பினர் ஒருவர் ஊழல் சந்தேக நபர் ஒருவரை வெளிக்கொணருவது அதாவது அவரது செயல் சமூக நீதியில் மற்றும் பொது நலனில் பரந்த அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்ததத விடயங்களில் உங்களது விடை என்னவாக இருக்கும்?. ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு என்பன அரச கட்டமைப்பில் காணப்படல் மற்றும் அவை சில சமூக குழுக்களில் பரவிக் காணப்படல் போன்ற நிலைகள் உள்ள நாடுகளில் இவை சாதாரணமாகக் காணப்படும். ஊடகவியலாளர்கள் அநேகமாக தவறு செய்யும் ஒரு நபரை வெளிச்சத்துக்கு கொண்டுவரல் ஏனையோரை பயமுறுத்துவதுடன் ஊழலுக்கு எதிரான போராட்டம் முன்னேற்றமடையும் என வாதிடுவர். ஆகக் குறைந்தது இதில் சிறிதளவு உண்மை உள்ளது. வெளிச்சத்துக்கு வருவோம் என்ற அபாயம் சில சாத்தியமான கொள்ளைக் கூட்டங்களை தடுப்பதோடு ஒரு சிறு தொகைப் பணமும் இதன் மூலம் செமிக்கப்படலாம். அத்துடன் இது வரி செலுத்துவோரின் பணம் என்பதனால் பொது மக்களுக்கு அதை அறிவதற்கான உரிமை உண்டு. எனினும் பத்திரிகைகள் எண்ணற்ற ஊழல் மிக்க தனி நபர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது அனைத்து கட்டமைப்புகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் ஊழல் ஆளப் பதிந்து காணப்படுவதன் காரணமாக இது முறை சார் ஊழலில் குறைந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். சிலவேளைகளில் ஊழலுக்கு எதிராகப் போராட உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளிலும் ஊழல் ஆழப் பதிந்து காணப்படலாம்.

எனினும் ஊடகவியலாளர்கள் ஊழலின் ஒரு நிகழ்வை வரி ஏய்ப்பு மற்றும் இலஞ்சத்தை இலகுவாக்கும் முறைமையில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்ட பயன்படுத்தினால் அந்த செய்தி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். புலனாய்வு ஊடகவியலாளர்கள் வரி ஏய்ப்பை மருத்துவ வசதிகளுக்கான நிதி வளங்கள் ஒதுக்கல் பற்றாக்குறையுடன் தொடர்பு படுத்தினால் அவர்களால் அது பற்றி வெறுமனே அழுவதை விட ஒரு பொதுப் பிரச்சனை பற்றி அவர்களால் விளக்க முடியும். தரப்புகள் மற்றும் கட்சிகள் என்பன ஒன்றுக்கொன்று ஊழல் தொடர்பில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை தமது சொந்த ஊழல்களை மறைக்கும் நோக்கில் முன்வைக்குமாக இருந்தால், இந்த ஊடகவியலாளர்கள் தமது வாசகர்களுக்கு தமது நாட்டின் அரசியலில் மறைக்கப்பட்ட தொடர் செயன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.