1.4. இயங்கு நிலைத் தரவுகள் (Data in motion)


புலனாய்வு ஊடகவியலாளர்களின் தொடர்பாடல் பாதுகாப்புக்கு அத்தியாயத்தின் இந்தப் பிரிவு மிகவும் முக்கியமானது. இங்கு நாம் இயங்கு நிலையில் உள்ள தரவுகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் விளக்கங்களை வழங்க உள்ளோம். இயங்கு நிலைத் தரவுகள் எனப்படுவது தகவல் ஒரு வலையமைப்பில் இருந்து இன்னோர் வலையமைப்புக்கு, மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் என்பவற்றில் பயன்படுத்துவதைப் போல், பயணிப்பதைக் குறிக்கும். பின்வரும் பாதுகாப்புக் கருவிகள் தகவல்கள் பெறுனரை அடையும் முன்னர் மூன்றாம் தரப்புகள் அவற்றை இடை மறித்து அவற்றை மாற்றுவதை தடுக்க முயற்சிக்கும்.