1.4.2. பாதுகாப்பான குறுந்தகவல்


சமகால தொடர்பாடல் போக்குகள் ஒட்டுமொத்தமாக மின்னஞ்சலைத் தவிர்த்து உடனடி தகவல் அனுப்பல் (Instant Messenger) வசதிகளான WhatsApp,  Telegram, Facebook Messenger அல்ல Snapchat தங்கியிருத்தலைக் காண்பிக்கின்றன. ஒரு சில நொடிகளில் உங்களால் தகவல்கள் மற்றும் ஆவணங்களை உலகின் எந்த மூலைக்கும் உங்களால் இந்த வசதிகள் மூலம் அனுப்ப முடியும்.

WhatsApp போன்ற சேவை வழங்குனர்கள் முனைக்கு முனை மறை குறியீடாக்க விளம்பரங்களை வழங்கிய போதும், எந்த சேவை வழங்குனரும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதில்லை. பொதுவாக இந்த சேவைகள் மூலம் இரகசிய தகவல்களை பகிர்வது மிகவும் ஆபத்தானது. Signal, Telegram அல்லது Wire போன்ற சில சேவை வழங்குனர்கள் அதிக பாதுகாப்பு கொண்ட முனைக்கு முனை மறை குறியீடாக்கம் கொண்ட சேவைகளை வழங்குகின்றனர். இவை iOS மற்றும் Android இரு இயங்கு தளங்களிலும் இயங்கும்.