2.1. உங்களைப் பாதுகாத்தல்


ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் – அல்லது பாதுகாக்காமல் விடும் – சட்டங்கள் நீதி மன்றம் ஒன்றில் அனுமதிக்கப்படக் கூடிய சான்றுகள் போன்று நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. எனினும், சட்டங்களை, நீங்கள் எடுக்கும் அபாய நேரிடர்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான பின்விளைவுகள் பற்றி அறிந்திருப்பது உங்களது பொறுப்பாகும்.

உங்களுக்கும் உங்களது தகவல் மூலத்துக்கும் இடையிலான சந்திப்புக்கு பொருத்தமான இடம் தொடர்பில் அறிவுபூரவமாக தீர்மானம் மேற்கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் பொது இடம் ஒன்றில் சந்திப்பதா அல்லது தனிப்பட்ட இடம் ஒன்றில் சந்திப்பதா சிறந்தது? அங்கு மக்கள் மற்றும் சத்தம் என்பன காணப்பட வேண்டுமா, அல்லது மறைவான, கைவிடப்பட்ட இடம் ஒன்று சிறந்ததா? அத்துடன் குறித்த இடம் காணொளி கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். உணர்திறன் மிக்க உரையாடலை யாராவது செவிமடுக்கக் கூடும் என நீங்கள் அஞ்சினால், சந்திப்பை அதிக சத்தம் மிக்க சூழல் ஒன்றில் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் சூழவுள்ள சத்தம் உங்களின் உரையாடலை அடுத்தவர் செவிமடுப்பதை மற்றும் கருவிகள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதை கடினமாக்கும்.

எவ்வாறாயினும், எழுத்து மூல குறிப்புகளை, கணணி ஒன்றில், ஒலி நாடா அல்லது ஒளி நாடா மூலமான பதிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவை முடியுமான அளவுக்கு சரியானதாக இருக்க வேண்டும். அவற்றை தேவையான நேரங்களில் இலகுவாக மீள எடுக்கும் விதத்தில் திகதியிட்டு கோவைப் படுத்துங்கள். தகவல் மூலம், அவன் அல்லது அவள் தன்னிடம் உள்ளதாகக் கூறும் தகவல்களைக் கொண்டுள்ளதா என்பதில் மிகவும் தெளிவாக இருந்து கொள்ளுங்கள்.

தகவல் மூலம் உண்மையாக எதைக் கண்டது அல்லது எவற்றை அறிந்துள்ளது அல்லது அத்துடன் எவற்றை கூறத் தயாராக உள்ளது, அதன் நோக்கங்கள் என்ன என்பவற்றை அறிய துருவித் துருவிக் கேளுங்கள். அத்துடன் அவை கூறும் விடயங்களை விபரமாகக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக அன்றி அவற்றை வரிக்கு வரி பதிவு செய்யுங்கள். அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்க முடியுமாயின் அவர்கள் கூறுவதை ஒலி நாடாப் பதிவுகளில் சேமித்துக் கொள்ளுங்கள். உங்களது தகவல் மூலத்துடனான அனைத்து தொடர்புகளையும், பணக் கொடுப்பனவு கோரிக்கைகள் மற்றும் நீங்கள் மேற்கொண்ட கொடுப்பனவுகள் தொடர்பில் நீங்கள் கலந்துரையாடியது உட்பட அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்படுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். செய்தியுடன் தொடர்புடைய செலவுகள் அனைத்துக்குமான பற்றுச் சீட்டுகளையும் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் தகவல் மூலங்களுடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான உறவு பேணப்படுவதை உறுதி செய்யுங்கள். எந்தக் காரணத்துக்காகவும் அவர்களிடம் பொய்யுரைக்கவோ அல்லது அவர்களை தவறாக வழிநடத்தவோ வேண்டாம். உங்களால காப்பாற்ற முடியாத எந்த வாக்குறுதிகளையும் வழங்க வேண்டாம் அத்துடன் இடம்பெற முடியாத எந்தப் பின்விளைவுகளையும் எதிர்வு கூற வேண்டாம். உங்களது தகவல் மூலங்களுடன் தனிப்பட்ட ரீதியில் நெருங்கவோ அல்லது அவர்களின் பிரச்சனைகளில் தலையிடவோ வேண்டாம். அவற்றை மேற்கொள்ளும் பொழுது உங்களால் தொழில்சார் இடைவெளியை அவர்களுடன் பேண முடியாமல் போகும்.

உங்களிடம் உண்மை கூறப்படுவதை உறுதி செய்ய நீங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எனவே அவர்கள் வழங்கும் தகவல் உங்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பினும் அவற்றை தொழில் சார் அமைதி மற்றும் சாதாரண சந்தேகம் என்பவற்றைப் பயன்படுத்திக் கையாளுங்கள். அவர்களின் தனிப்பட்ட விபரங்களை சோதனைக்கு உட்படுத்துங்கள். அத்தடன் அவர்கள் மறைக்க முயற்சிக்கும் செய்தியின் எந்தப் பகுதி தொடர்பிலும் சந்தேகம் கொண்டவராக இருங்கள். அவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேளுங்கள். அவர்களுடனான உறவில் எதிர்பாராத நிறுத்தங்கள் மற்றும் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க தயாராகவே இருங்கள். பிழையாகச் விடயம் தொடர்பில் எப்போதும கேள்விகளைக் கேளுங்கள். முழுமையான சாட்சி என்ற விடயம் யதார்த்தத்தில் காணப்படுவதில்லை, நீங்கள் ஏற்கனவே உங்கள் தகவல் மூலம் தொடர்பில் அறிந்திராத விடயம் ஒன்றை பின்னர் அறிந்து வியப்புக்குள்ளாவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். தகவல் மூலங்களின் பாதுகாப்பு தொடர்பில் நீங்கள் பரஸ்பரம் ஏற்றுக் கொண்ட விடயங்களுக்கு மேலதிகமாக உங்களின் கட்டுரை அல்லது ஒலிபரப்பின் உள்ளடக்கத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கவல்ல எந்த ஒரு ஆலோசனையையும் எதிருங்கள்.