1. உங்களது செய்தியை எவ்வாறு எழுதுவது

1. உங்களது செய்தியை எவ்வாறு எழுதுவது


உங்களது கடினமான புலனாய்வுப் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர், நீங்கள் வெளிக் கொண்டு வந்த விடயங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் எண்ணும் பொழுது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: என்னிடம் சொல்வதற்கு தகுதியான செய்தி ஒன்று உண்மையாக இருக்கின்றதா? இந்தக் கேள்வி நீங்கள் எவ்வாறு இந்த செய்தியை உருவாக்கினீர்கள் மற்றும் எழுதினீர்கள் என்பதில் இருந்தே எழுகின்றது. இந்த விடயங்கள் அசாதரணமான மற்றும் அறிவுக்கூர்மை வாய்ந்த புலனாய்வு அறிக்கைக்கு மிக முக்கியமான விடயங்களாகும்.

செய்தி ஒன்று வாசகர்களிடம் செல்வாக்கு செலுத்த வேண்டுமாயின் உங்களது அறிக்கயிடலின் இதயப்பகுதி பற்றி சிந்திக்க வேண்டியுள்ளதுடன் மிகவும் சக்தி வாய்ந்த படங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். வாசகர்களின் கவனத்தைக் கவர அமெரிக்காவின் ஊடகவியலாளர் ஸ்டீபன் பிராங்க்ளின் “காட்சியை வலுவான வகையில் உருவாக்கும் உயர்வான தனிப்பட்ட வழிகாட்டி ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்” எனப் பரிந்துரை செய்கிறார். மிகவும் அடிப்படையான விபரங்களை மாத்திரம் அது வழங்க வேண்டும் என்பது முக்கியமானது. முழுமையான விபரங்களைப் பின்னர் விபரிக்கலாம். “எனினும், நீங்கள் கண்டறிந்த விடயங்களை மாத்திரம் நேர்மையாக எழுதுவது முக்கியமானது. உங்களது செய்தியுடன் கலந்திராத விடயங்களின் விம்பங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டாம், அல்லது நிகழ்வு அல்லது சமபவம் ஒன்றினை பரபரப்பாக்கத்துக்கு உட்படுத்த தேட வேண்டாம். உங்களது வாசகர்களின் நம்பிக்கையை வென்றெடுத்தல் அவசியமானது அத்துடன் செய்தி ஒன்றில் பொய்யாகத் தோன்றக் கூடிய ஆரம்பம் காணப்படுமாயின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான முயற்சியை அது பாதிக்கும்.

நீங்கள் அனைத்து தகவல்களையும் சமர்ப்பித்த பின்னர், உங்களது கண்டுபிடிப்புகளை ஒன்று படுத்தி அவற்றை உண்மைகளுடன் நிரூபித்து செய்தியை நிறைவுக்குக் கொண்டு வாருங்கள். மிகச் சிறப்பான புலனாய்வுச் செய்தி முழுமையான ஆதாரத்தைக் கொண்டிருக்கும் – “புகை கக்கும் துப்பாக்கி” – நீங்கள் குறிப்பிடும் குற்றவாளிகள் நீங்கள் குற்றம் சாட்டும் பிரச்சனைகளை உண்மையாக ஏறபடுத்தி இருப்பார்கள். எனினும், அநேகமான சந்தர்ப்பங்களில் உண்மையாக நம்பக் கூடிய புலானைவுச் செய்திகள் அவற்றை எழுதுவோர் பயன்படுத்திய தொய்வான, வார்த்தைகள், அவர்களது சான்றுகள் அல்லது அந்த சான்றுகள் இணைக்கப்பட்ட விதம் என்பவற்றின் காரணமாக எந்தப் புலனையும் ஏற்படுத்துவதில்லை. மிகவும் கெட்ட விடயமாக மோசமாக கட்டமைக்கப்பட்ட இந்த வெளிப்பாடுகள் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பனவாக அமையும்.