1.2.1. கூற்றுக்களைப் பயன்படுத்தி செய்தியை எழுதுதல்


ஒட்டு மொத்த செய்தியையும் சொல்வதற்காக அன்றி ஒரு விடயத்தைக் குறிப்பிட மாத்திரம் கூற்றுக்களைப் பயன்படுத்துங்கள். அடிப்படையான மற்றும் உண்மை விடயங்களைக் கூற கூற்றுக்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவற்றை தகவல் மூலங்களுடனான உங்களது உரையாடலைக் குறிப்பிடப் பயன்படுத்துங்கள். எனினும் அவற்றை உங்களது தகவல் மூலங்கள் உங்களிடம் கூறிய விடயங்களை பகுப்பாய்வு செய்வதன் மாற்றீடாகப் பயன்படுத்த வேண்டாம். விசேடமாக புலனாய்வு ஒன்றின் போது தகவல் மூலம் உங்களிடம் கூறிய அதே வார்த்தைகளைப் பயன்படுத்துவது முக்கியமானதாகும், எனினும் பின்வருவன அதற்கு விதிவிலக்காகும்:

  • ஒருவர் கூறிய விடயம் விளங்குவதற்கு கடினமானதாக இருத்தல், அல்லது அவர்களை கேலிக்கு உரியவர்களாக காண்பிக்கும் அல்லது அது பேச்சின் சுவையுடன் ஒன்றிக்கவில்லை.
  • உங்களது பிரசுரிப்பாளர் அனுமதிக்காத பட்சத்தில் ஆபாசமான மற்றும் கொச்சையான வார்த்தைகள்.
  •  “பாருங்கள்”, உங்களுக்கு தெரியும்” அல்லது “நான் நினைக்கிறேன்” போன்ற இடைவெளி நிரப்பும் வார்த்தைகள். அவை தேவையற்றவை மற்றும் எவற்றையும் சேர்க்காது.

அனைத்துக் கூற்றுகளையும் கற்பித்துக் கூறுவதுடன் நீங்கள் நேரடியாக அவதானிக்காத விடயங்கள் அனைத்துக்கும் தகவல் மூலத்தின் மேற்கோளை வழங்குங்கள். புலனாய்வுச் செய்தி ஒன்றில் கற்பித்துக் கூறுதல் தொடர்பில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் வாசகர்கள் உங்களது ஆதாரத்தின் பயனை பகுதியளவில் அதை வழங்கிய தகவல் மூலத்தை கருத்தில் கொண்டே மட்டிடுவார்கள். அத்துடன், உங்களது செய்தியில் ஒரு புதிய பேச்சாளர் உள்நுழையும் வேளை அதைத் தெளிவாகக் காண்பியுங்கள். குறிப்பிட்ட காரணம் ஒன்றுக்காக உங்களால் அதைக் கற்பிக்க முடியாவிட்டால் அதை ஏனென விளக்குங்கள்; உதாரணமாக, “நான் இதை உங்களுக்கு காண்பித்தது தெரிய வந்தால் எனது கம்பனி என்னை வேலை நீக்கம் செய்வார்கள்” என நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டவர் தெரிவித்தார். கூற்றுக்களைப் பயன்படுத்தும் போது அவற்றை நீங்கள் தெரிவு செய்தல் மற்றும் அறிமுகப் படுத்தல் என்பவற்றை பொருத்தமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • கூற்றுக்கு முன்னர் வரும் வரி அடுத்து என்ன வர உள்ளது என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்ள உதவ வேண்டும்.
  • கூற்று தொடர்பில் நீங்கள் வழங்கும் அறிமுகம் அதன் தகவல் நோக்கி கட்டி எழுப்பபடுவதாக அமைய வேண்டும்.
  • கூற்றுகள் பெறுமதி சேர்க்கின்றன, தகவல் மூலங்களின் எவற்றையும் கொடுக்காத நேரடியான வார்த்தைகளை தெரிவு செய்ய வேண்டாம், அத்துடன் திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைக் கூற வேண்டாம்.
  • பேச்சுகளை விபரிக்க “அவன்ஃஅவள் சொன்னான்ஃசொன்னாள்” என்பதை தொடர்ந்து பயன்படுத்தவும். ஏனைய வார்த்தைகள் (“உறுதியாகக் கூறினார்” “கோரினார்” மற்றும் “விவாதித்தார்” போன்றன) தேவையற்ற சுழலை வழங்கும் அல்லது (“மறுத்து வாதிட்டார்”, “தள்ளுபடி செய்தார்” போன்ற வார்த்தைகள்) வாசகர்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்படலாம். இரசனையைக் கூட்டும் வார்த்தை ஒன்றை மிகத் துல்லியமானது என நீங்கள் கருதும் பட்சத்தில் மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.
  • பொழிப்பை வழங்கும் பொழுது அதை சுழல விட வேண்டாம். தகவல் மூலத்தின் உணர்வு தொனி என்பவற்றை பயன்படுத்துங்கள். உதாரணமாக, பேச்சாளர் “எங்களிடம் பாதீடு ஒன்று இல்லை” எனக் கூறியதை “தனது கம்பனி அந்த விடயத்தில் செலவளிக்க தயாராக இல்லை என அவள் கூறினாள்” என எழுத வேண்டாம். அவ்வாறு நீங்கள் எழுதும் பொழுது கமபனியின் நிதி நிலையை மாத்திரமன்றி மனப்பாங்கையும் குறித்து நிற்கின்றது.