புலனாய்வு அறிக்கையிடல் என்பது சிலவேளைகளில் அபாய நேரிடர் மிக்கதாக இருக்க முடியும், குறிப்பாக அரசியல் பிரச்சனைகள் உணர்திறன் மிக்கவைகளாக மற்றும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படும் மற்றும் சிலவேளைகளில் கொல்லப்படும் நாடுகளில் இந்த நிலை காணப்படுகின்றது. எனவே இரகசியமாக (அல்லது மறைவாக) செயற்படுவது முக்கியமானதாகும். எனவே செய்தி பிரசுரிக்கப்படும் நிலையில் ஏற்படக்கூடிய கூடிய சாத்தியமான அபாயங்கள் பற்றி உங்களது தகவல் மூலங்களை எச்சரிப்பது உங்களது பொறுப்பாகும் – அத்துடன் செய்தி பிரசுரிப்பதால் கிடைக்கவிருக்கும் சமூக நன்மைகள் மற்றும் பொது மக்கள் நலன் பற்றியும் அவர்களுக்குக் கூறுங்கள். இந்த இரண்டு விடயங்களையும் அவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே குறித்த மூலம் விடயங்களை அறிந்து தனது பெயரை செய்தியில் வெளியிட அனுமதித்தது என உங்களால் கூற முடியும். குறித்த தகவல் மூலம் உங்களை சந்திப்பதில், செய்தி தொடர்பில் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சல் மூலமாக கலந்துரையாடுவதில் உள்ள அபாய நேரிடர்களை அறிந்து கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தகவல் மூலங்கள் தொடர்பான தகவல்களை செவியுறக் கூடிய, ஒட்டுக் கேட்கக் கூடிய, (தொலைபேசி அழைப்புகளை) இடைமறித்துக் கேட்கக் கூடிய அல்லது மின்னஞ்சல்களை ஊடறுத்து (hacked) நோக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் கலந்துரையாட வேண்டாம். உங்களது தொலைபேசி அழைப்பு வரலாற்றை, கையடக்க தொலைபேசிகளுக்கு மேற்கொண்ட அழைப்புகள் உட்பட, கண்டு பிடித்தல் மற்றும் உங்களின் இருப்பிடத்தை கண்டறிய வழமையான சமிக்ஜைகளை பயனபடுத்துதல் என்பன இலகுவான விடயங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இரகசியமான சந்திப்புகளை மேற்கொள்ளச் செல்லும் முன் உங்களது கையடக்க தொலைபேசியை செயலிழக்க வைத்து அதில் இருந்து மின்கலத்தை வேறாக்குங்கள். உங்களது தகவல் மூலம் தொடர்புடைய எந்த ஒரு குறிப்பு அல்லது பதிவும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்; புலனாய்வில் தொடர்புடைய மூன்றாம் தரப்பினால் தகவல் மூலங்கள் தொடர்பான விபரங்கள் வெளிவர சிலவேளைகளில் வாய்ப்பு உள்ளது.

பெருமை மிக்க மற்றும் பலம் வாய்ந்த நபர்களின் சுழற்சிகள், பொய்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக போராடுவதற்கான வினைத்திறன் மிக்க ஒரேயொரு வழி ஐயமின்றி பேசக் கூடிய வெளிப்படையான சாட்சிகளே ஆகும். எனவே, அவற்றை அடைவதற்கு நீங்கள் நேரம் செலவழிக்க வேண்டும். எவ்வாறாயினும் உங்களுடன் பேசுவதற்கோ அல்லது உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குவதற்கோ எவரையும் உங்களால் பலவந்தப்படுத்த முடியாது. அவர்களின் தயங்கல்களுக்கு பின்னால் உள்ள காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; அந்தக் காரணங்கள் பற்றி கேட்க அஞ்ச வேண்டாம். உங்களது பெயர் தெரிய வருமிடத்து என்ன நடக்கக் கூடும்? எனக் கேட்பது ஒரு சிறந்த கேள்வியாகும். சிலவேளைகளில் அதற்கான காரணம் தனிப்பட்ட பயமாகும்: ஆவணங்கள் அற்ற குடியேற்ற வாசி தனது அடையாளம் தெரியவருமிடத்து நாடுகடத்தப்படும் அபாயம் உள்ளது. ஒரு சிரே~;ட அதிகாரி வேலைநீக்கம் செய்யப்பட, ஏன், சிறையில் அடைக்கப்படக் கூட வாய்ப்புள்ளது. உங்களது தகவல் மூலம் ஒரு HIV தொற்று நோயாளி எனத் தெரிய வருமிடத்து அவர் சமூகத்தினால் தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் அபாயம் உள்ளது. எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் இடம்பெற முன்னர் குறித்த தகவல் மூலத்தின் அடையாளம் சில வேறு நபர்களுடன் பகிரப்பட வேண்டி வரலாம் என்பதை குறித்த தகவல் மூலத்துக்கு விளக்குங்கள். அவர்களின் இடம், பின்புலம், நிலை, அல்லது பால்நிலை என்பவை கூறப்படும் விதம் உட்பட நீங்கள் அவர்களின் அடையாளத்தை எவ்வாறு மறைப்பீர்கள் என அவர்களுடன் கலந்துரையாடுங்கள். தகவல் மூலத்தின் குறிப்பிட்ட தகவல்கள் உத்தியோகப் பற்றற்றவையாக அல்லது பின்புலம் பற்றியதாக மாத்திரமாக அமைய வேண்டும் என்ற தேவையை ஏற்றுக் கொள்ளுங்கள் – இருந்த போதும் செய்தியுடன் தொடர்புடைய உங்களது ஆசிரியர் மற்றும் ஏனைய சகபாடிகளுக்கு இதைப் புரிய வைப்பதற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வரலாம். உங்களது செய்தி ஆசிரியர் தகவல் மூலத்தின் பெயரைக் கூறுமாறு கோரக் கூடும். நீங்களை அதை வெளிப்படுத்தும் வேளை அந்தத் தகவல் செய்தி ஆசிரியரின் பணி அறையைத் தாண்டி வேறெங்கும் செல்லக் கூடாது என்பதை தெளிவாகக் கூற வேண்டும். இதுவே நிருபர்கள் மற்றும் தகவல் மூலங்கள் இடையான உறவைப் பேணுவதில் உள்ள ஒரேயொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த கொள்கையாகும்.

நீங்கள் யாருடைய அடையாளத்தையாவது மறைப்பதற்குரிய கடப்பாட்டை வழங்கினால், நீங்கள் அதன் மூலம் சிறையில் அடைக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் அதை நிறைவேற்ற வேண்டும். எனினும் உங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தகவல் மூலம் ஒன்றுக்கு முன்னரே வழங்க வேண்டாம்;. சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ஒருவரின் தார்மீக பொறுப்பை ஏற்பதை விட பெயர் குறிப்பிடப்படாத அல்லது உத்தியோகப் பற்றற்ற தகவல் மூலம் ஒன்றைப் பயன்படுத்துவது சிறந்தது.
பல நாடுகளில் நிருபர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் தகவல் மூலங்களின் பெயர்களை வழங்கக் கோரி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நாடுகளில் ஊடகக் குற்றங்கள் சிவில் சட்டக் கோவை அன்றி குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதால் தீர்ப்புகள் உங்களது தகவல் மூலங்களுக்கு எதிராக அமைவதோடு நீங்கள் தகவல் மூலங்களின் பெயர்களை வெளிப்படுத்த மறுப்பது நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அல்லது நீதி மன்றத்தை அவமதிப்பதாக அமையும் அத்துடன் அது சிறைத் தண்டனைக்கும் வழிகோலும். எனவே புலனாய்வு ஒன்றில் தகவல் மூலங்களுடன் செயற்பட முன்னரே அவற்றைப் பாதுகாக்க உங்களால் எந்த அளவுக்கு இயலும் என்பதில் உங்களது சொந்த வரையறைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனது ஊடகவியலாளர் அனுபவத்தில் ஏற்பட்ட மிகவும் கெட்ட அனுபவம் எனது தகவல் மூலம் ஒன்று கொல்லப்பட்டதே ஆகும். ஏனெனில் குறித்த தகவல் மூலத்திடம் எனக்கு வழங்கப்பட்டதை விட அதிகமான தகவல்கள் இருந்தன, எனினும் அவர் நிலைமைய ஆராய குறைந்தளவு தகவலையே வழங்கினார். அவருடைய அடையாளம் வெளிப்படுத்தப் படுவதை அவர் விரும்பவில்லை. எனினும் அவருடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் அவர் யாரென அடையாளம் காண்பது சிரமமான விடயமாக இருக்கவில்லை அத்துடன் அவர் கொல்லப்பட்டு விட்டார். எனவே தகவல் மூலங்களாக நீங்கள் துளித் துளியாக விடயங்களை வழங்காமல் இருப்பது சிறந்தது, எனவே உங்களைக் கொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. அல்லது உங்களின் பெயரை பயன்படுத்தும் அபாய நேரிடரை நீங்கள் எடுக்க வேண்டும் அதன் மூலம் உங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் உங்களது ஊதல் அடித்தல் (றாளைவடந டிடழறiபெ) செயற்பாட்டுக்கு எதிராகவே மேற்கொள்ளப் படுகின்றது என்பது தெளிவாகத் தெரியும். அது தகவல் மூலப் பாதுகாப்பின் இன்னொரு பக்கமாகும் – சாம் சோல், மெயில் மற்றும் கார்டியன், ஜோஹானஸ்பேர்க்.

எவ்வாறாயினும், உங்களது செய்தியில் பெயரற்ற தகவல் மூலம் ஒன்றைப் பாவிப்பதற்கான ஒரேயொரு காரணம் தீங்கில் இருந்தது குறித்த தகவல் மூலத்தை பாதுகாப்பதே ஆகும். பெயர் குறிப்பிடப்படாத தகவல் மூலங்கள் கண்காணிக்கப்பட கடினமானவை, அது தவறான அறிக்கையிடலை ஊக்குவிப்பதோடு வாசகர்கள் உங்கள் செய்தியின் மீது குறைந்த நம்பிக்கை கொள்ள ஏதுவாக்கும். எனினும் அவ்வாறான மூலங்கள் முதல் தர உள்ளக அறிவை, முக்கயமான உறுதிப்படுத்தல்களை வழங்குகின்றன அல்லது மேலதிக சான்றுகளுக்கு வழிகோலுகின்றன. உங்களது இறுதி முடிவை உங்களது பிரசுரத்தின் குறிப்பான சூழ்நிலைகள், தகவல் மூலம் மற்றும் செய்தி எபவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளுங்கள். உங்களது தகவல் மூலத்தை செய்தியில் எவ்வாறு குறிப்பிடுவது என தகவல் மூலத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுங்கள், அத்துடன் அவர்கள் பற்றிய விபரத்தை பாதுகாப்பாக இருக்கும் வகையில் தெளிவாகக் குறிப்பிடுங்கள். வன வள அமைச்சில் ஒரேயொரு சூழல் அறிவியலாளர் மாத்திரம் பணிபுரியாத இடத்து அங்கு பணி புரியும் ஒரு சூழல் அறிவியலாளர் எனக் குறிப்பிடுவது “ஓர் அறிவியிலாளர்” எனக் குறிப்பிடப்படுவதை விட சிறந்தது.