ஒரு நபரை உருவகப்படுத்தும் வேளை உங்களது ஊடகவியலாளர் உள்ளுணர்வு சிறந்த அடைவுகளையே எதிர்பார்க்கும், எனினும் அது அனேகமாக எதிர்மாறாகவே இருக்கும். எனினும் உங்களுக்கு அவசியப்படுவது உண்மையான யதார்த்தங்களே ஆகும். சக மனிதரைப் பற்றிய உணர்வை நீங்கள் எவ்வாறு பெறலாம்? நீங்கள் அவர்ஃஅவள் சொந்தமாகக் கொண்டுள்ள சொத்துகள் எவை என்பதில் தொடங்கலாம். அதன் பின்னர் குறித்த நபரின் தனிப்பட்ட வரலாற்றைப் பரிசோதிக்கலாம். இந்த தனி நபர் பற்றி அறிந்த அல்லது அவருடன் பணி புரிந்த நபர்களுடன் உரையாடுங்கள். குறித்த நபரைப் பற்றி அவர்கள் எவ்வாறு விபரிக்கின்றனர்? அவ்வாறான சான்றுகளுக்கு முகம் கொடுத்த பின்னர் நீங்கள் கேட்ட தலைப்புடன் சரியான பாதையில் செல்கிறீர்களா என சந்தேகப்பட ஆரம்பிக்கலாம். எனினும் நிகரற்ற உள்வட்ட நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – எந்த குறிப்புகளையும் எடுத்தவுடன் நம்பக் கூடாது.

கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள் என்பவை வெறுமனே ஊடக நேர்காணல் பாணியில் நபர்களுடன் உரையாடுவதை நீங்கள் அவற்றை மேற்கொள்ள வேண்டி இருந்தாலும் அதை மாத்திரம் குறிக்கவில்லை. எனினும் நபர்களின் அனுபவம் அல்லது பார்வையிட்ட விடயங்கள் மூலம் பெறப்பட்ட உங்களது சொந்த தகவல் தளத்தை அல்லது புள்ளிவிபரங்களை உருவாக்க முறைசார் தொடர் செயன்முறை ஒன்றை நீங்கள் உருவாக்க வேண்டும். கட்டமைக்கப்பட்ட நேர்காணல்களில் நபர்களிடம் நேர்காணலை மேற்கொள்ள நியமப்படுத்தப்பட்ட கேள்விகளின் பட்டியல் ஒன்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும் (எனினும் உரையாடல் ஒன்றின் போது புதிய விடயம் ஒன்று வெளிவருமாயின் நெகிழ்வுத் தன்மையுடன் மேலதிகக் கேள்விகளை உள்ளடக்க வேண்டி ஏற்படலாம்). மூலங்களின் வாய்மொழிக் கூற்றுகளை ஒப்பிட எழுத்து வடிவ பதிவுகள் காணப்படாததால் அந்தத் தரவுகளை அளவுசார் முறையில் தொகுப்பது அவசியமாகும். இந்த வழக்கம் ஒரு சிறிய தகவல் சேகரிப்பை மேற்கொள்ள உங்களை அனுமதிக்கும் அத்துடன் பின்வரும் வழிமுறைகளின் படி பணியை மேற்கொள்ள வேண்டும்:

(1) காணப்படக் கூடிய யதார்த்தங்களை தரக் கூடிய முழுமையான கேள்விகளின் பட்டியல் ஒன்றை தயார் செய்யவும். உதாரணமாக, மூலங்களிடம் ஏதாவது விடயம் முதன் முதலில் எப்போது இடம்பெற்றது என்று கேளுங்கள். இந்த வழிமுறையில் ஒரு குறித்த பிரச்சனை எப்போது முதன்முதலில் இடம்பெற்றது என மதிப்பிட முடியும் (உதாரணம்; பாலியல் வன்புணர்வுகள், இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள், பயிர்களின் வறட்சி, பாதை பழுதடைதல், உள்ளூர் மக்கள் காணாமல் ஆக்கப்படுதல்), அவற்றுக்கு சாத்தியமான காரணங்கள் (உதாரணம்; மக்கள் இவ்வாறு கூறக் கூடும் “இது நடந்தது X என்ற விடயம் நடந்த அதே நேரத்தில்) அத்துடன் ஏனையோரின் பதில்கள் (நாங்கள் X என்ற நகரத்துக்கு இடம்பெயர முடிவு செய்தோம்)

(2) அனைத்து மூலங்களிடமும் ஒரே நியமப் படுத்தப்பட்ட கேள்வித் தொகுதிகளையே கேட்கவும்.

(3) கேள்விகளைத் துல்லியமாகக் கேட்கவும், உறுதியான விபரங்களைத் தேடி அவர்களின் பதில்களை சரியாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் திறந்த மற்றும் நுட்பமான விடைகளைத் தேடினாலும் இது முனை மூடப்பட்ட (Close-ended) கேள்விகள் (மூடிய வினாக்கள்) மூலம் திட்டமான விடைகளைப் பெறும் நேர்காணல் வகையாகும். ஒட்டுமொத்தமாக, இந்த விடைகள் உங்களது சொந்த தகவல் தளத்தினை உருவாக்க பயன்படுத்தப்படலாம்.