புலனாய்வு ஊடகத்துறை என்பது ஊடகவியலாளர்;கள் ஊழலை வெளிக்கொணரக் கூடிய, அரசு அல்லது பெரும் நிறுவனங்களின் கொள்கைகள் அல்லது அரசியல், சமூக, பொருளாதார அல்லது கலாச்சார போக்குகளின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் ஒரு விடயத்தை ஆழமாக புலனாய்வு செய்வதாகும். ஒரு புலனாய்வு ஊடகவியலாளர் அல்லது ஊடகவியலாளர் குழாம் ஒன்று ஒரு விடயம் ஒன்றை ஆய்வு செய்வதில் மாதங்களை அல்லது வருடங்களை செலவளிக்க வேண்டி வரலாம். பாரம்பரியமான அறிக்கையிடலில் ஊடகவியலாளர்;கள் அறிக்கையிடலை மேற்கொள்ள அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய முகவர் அமைப்புகள் வழங்கும் விடயங்களிலேயே தங்கியுள்ளன எனினும் புலனாய்வு அறிக்கையிடலில் ஊடகவியலாளரின் சொந்த முன்னெடுப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் விடயங்களின் சேகரிப்பிலேயே தங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வேண்டுமென்று அல்லது தவறுதலாக மறைக்கப்படும் பொது மக்களின் விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை நோக்காகக் கொண்டது.

புலனாய்வு ஊடகத்துறையில் நிருபர் ஒருவர் பொது மக்கள் நலன் சார்பான விவகாரம் ஒன்றினை ஆழமாக தேட வேண்டும். இங்கு பொது மக்கள் நலன் என்பதன் மூலம் கருதப்படுவது குறித்த தகவலை சமூகம் அறியாத விடத்து அச்சமூகத்துக்கு பிரதிகூலமான விளைவு ஏற்படும் அல்லது அறிவதன் மூலம் நன்மை அடையும் சந்தர்ப்பங்களை சொல்லலாம். (இந்த நன்மையானது பொருள் ரீதியானதாக அல்லது தகவல் செறிவான தீர்மானங்களை மேற்கொள்ளல் மூலமாக எட்டப்படலாம்). சிலவேளைகளில் ஒரு சமூகம் நன்மை பெறுகின்ற வேளையில் பிறிதொரு சமூகம் தீமை அடையலாம். உதாரணமாக “மரம் வெட்டும் கம்பனிகள் காடுகளில் வாழ்வோரிடம் வெட்டும் படி கூறும் மரங்களின் உண்மையான சந்தைப் பெறுமதியை காடுகளில் வாழ்வோர் அறியுமிடத்து அவர்கள் கூடிய விலையை கோரக்கூடும். இந்த சந்தர்ப்பத்தில் மரங்களின் விலை அதிகரிக்கும் என்ற காரணத்தினால் மரம் வெட்டும் கம்பனிகள் அந்த மரத்தின் விலைகளை காடுகளில் வாழ்வோர் அறிவதை நிச்சயமாக விரும்பாது. இந்த விடயத்தில் ஒட்டு மொத்த நாடும் பாதிக்கப்படும்” என்று கூற முடியாது. அநேகமான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் நலன் என்பது தேசிய நலனில் இருந்து வேறுபடுத்தப்பட முடியும். தேசிய நலன் என்ற பதம் சிலவேளைகளில் முக்கிய பிரச்சனை ஒன்றின் சட்ட விரோத, பயங்கரமான மற்றும் ஒழுக்கமற்ற விடயங்களை ஊடகவியலாளர்கள் அறிக்கையிடுவதைத் தடுப்பதற்கான நியாயமாக சிலவேளைகளில் அரசாங்கங்களினால் பயன்படுத்தப்படுகின்றது.

புலனாய்வு ஊடகவியல் என்பது கணப்பொழுதில் இடம்பெறுகின்ற விடயமன்று. அது தெளிவாக தெரிகின்ற திட்டமிடல் படிநிலைகள், ஆய்வு மற்றும் அறிக்கையிடல் மூலமாக மேற்கொள்ளப்படுவதோடு அது செம்மை மற்றும் ஆதாரம் என்பவற்றின் ஏற்கப்பட்ட நியமங்களைப் பற்றியொழுகி மேற்கொள்ளப்பட வேண்டும். புலனாய்வுச் செய்தி ஒன்றுக்கான அடிப்படை ஊடகவியலாளர் மற்றும் காணப்படும் வளங்கள் போதுமாக இருப்பின் அவனதுஃஅவளது குழாம் மேற்கொள்ளும் முன்யோசனை மிக்க பணியாகும். ஊடகவியலாளர்கள் செய்தி ஒன்றுக்கான துணுக்கை(clue) பெற்றவுடன் அதற்கான கருதுகோள்களை உருவாக்குதல், மேலதிக ஆய்வைத் திட்டமிடல், பொருத்தமான கேள்விகளை முடிவு செய்தல் அத்துடன் அதனைப் புலனாய்வு செய்யப் புறப்படுதல். விடயங்களை பார்த்தல் மற்றும் விடைகளைப் பகுப்பாய்வு செய்தல் மூலம் அவர்கள் ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் துணுக்கை சரிபார்ப்பதற்கு மேலதிகாமாக மேற்கொள்ள வேண்டும். இறுதியான செய்தி புதிய தகவல்களை வெளியிட வேண்டும் அல்லது ஏற்கனவே காணப்படும் தகவல்களை அந்த விடயத்தின் முக்கியத்துவத்தை வெளிக்கொணரும் வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும். ஓர் ஒற்றை மூலம் கவர்ச்சியான வெளியீடுகள், மறைக்கப்படக்கூடிய உள்நோக்குகள் மற்றும் தகவல்களை வழங்க முடியும். எனினும் குறித்த செய்தி அனுபவம், ஆவணம் மற்றும் மனிதர்கள் போன்ற ஏனைய மூலங்களுடன் சரி பார்க்கப்பட்டு ஆராயப்படாதவிடத்து அது புலனாய்வு என்ற பிரிவுக்குள் அடக்கப்பட முடியாததாகும்.

புலானாய்வு அறிக்கையிடலுக்கு சாதாரண செய்தி அறிக்கையிடலிலும் பார்க்க கூடிய வளங்கள், குழுப்பணி மற்றும் அதிக நேரம் என்பன தேவைப்படுகின்றன. அதிகமான செய்திகள் குழுப் புலனாய்வின் மூலமாகவே வெளிவருகின்றன. எனினும் வரையறுக்கப்பட்ட நிதி வளங்கள், ஆளணி அல்லது  திறன்கள் கொண்ட உள்;ர் மற்றும் சமூக பதிப்பாளர்களுக்கு இது பிரச்சனையான விடயமாகும். எனவே ஒரு ஊடகவியலாளர் தனது புலனாய்வுக்கு மானியங்களைத் தேடுதல் மற்றும் செய்தி அறைக்கு வெளியே உள்ள தனி நபர்களின்  நிபுணத்துவத்தை பெற்றுக் கொள்ளப் பழக வேண்டும்.

கொங்கோ நாட்டு ஊடகவியலாளரான சேஜ் பிடல் கயாலா குழுப் பணிக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்களை முன் வைக்கிறார்:

“சிறிய குழு ஒன்றினுள் பணி புரிவது வினைத்திறன் மிக்கதாக அமைய முடியும், நீங்கள் ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் பயன்மிக்க நிபுணத்துவம் ஒன்று காணப்படுவதை நீங்கள் ஏற்படுத்தி இருப்பீர்கள். ஒருவர் களத்தில் புலனாய்வை மேற்கொள்பவராக இருப்பார், இன்னொருவர் ஆய்வு மற்றும் தொகுத்தலில்  திறன் கொண்டவராக இருப்பதுடன் மூன்றாமவர் செய்தியை எழுதுவதில் வல்லுனராக இருக்கக் கூடும். குழு ஒன்று விரைவாக பணி புரிதல் மற்றும் நேரத்துக்கு செய்தியை வெளியிடுதல் ஆகியவற்றுக்கு சிறந்த வாய்ப்பைக் கொண்டதாகக் காணப்படும். எனினும் நாம் பணி புரியும் நாடுகளில் காணப்படும் செய்தி அறைகள் சுத்தம் மிக்கனவாகக் கானப்படுதில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். செய்தி அறைப் பணியாளர்கள் தொழில் துறை, வர்த்தகங்கள் அல்லது கொள்கை வகுப்பாளர்கள் போடும் தூண்டில்களை நோக்கி கவரப்பட முடியும். இங்கு அச்சுறுத்தல் அல்லது ஊடகவியலாளரை விலைக்கு வாங்குதல் என்பன உள்ளடங்குகின்றன. பெரும்பாலான எமது பத்திரிகைகள் கூட சந்தேகத்துக்குரிய தோற்றுவாய்களைக் கொண்டுள்ளன. வேறுபட்ட நலன் உள்ள குழுக்களின் நிதி வழங்கலின் பின்னர் தாம் ஆரம்பித்த விடயங்களைக் கைவிடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இங்கு பத்திரிகை ஆசிரியர்களே முதன்மையான இலக்காகக் காணப்படுவதுடன் அவர்களே பிரதான தவறிழைப்போராக சில வேளைகளில் காணப்படுகின்றனர். அத்துடன் இவ்வாறான சூழமைவில் பணி புரியும் இளைய ஊடகவியலாளர் ஒருவர் தனது புலனாய்வுத் திட்டத்தை பூர்த்தி செய்வதில் பாரிய கடினங்களை எதிர்நோக்குவார்”

Recommendation
Recommendation

Recommendation