புலனாய்வு ஊடகவியல் அதிக நேரம் தேவைப்பட்டதாக, செலவு கூடியதாக மற்றும் அபாய நேரிடர் மிக்கதாக அமைய முடியும். அத்துடன் அநேகமான சந்தர்ப்பங்களில் புலனாய்வு ஊடகவியலாளர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவை திருப்திகரமான பத்திரிகையை வெளியிட துணை புரியும் என தமது பத்திரிகை ஆசிரியர்களை நம்ப வைக்க வேண்டும். எனவே, புலனாய்வு ஊடகவியல் ஏன் பெறுமதி வாய்ந்தது? அத்துடன், அதற்கான முதன்மையான எதிர்ப்புகள் எங்கிருந்து எழுகின்றன?

நிலை மாறுகால நாடுகளில் பத்திரிகை உரிமையாளர்கள் புலனாய்வு ஊடகவியல் என்பது மேற்குலக கலாச்சாரத்தின் ஒரு உற்பத்தி எனவும் அது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பொருத்தமானது அல்ல எனவும் நம்பக்கூடும். எனினும் இந்த செயற்பாடு எப்போதும் நேரம் மற்றும் நிதி வளங்கள் என்பவற்றின் தேவை கொண்டதாக அமைவதில்லை. ஊடகவியலாளர்கள் தமது உறுதிப்பாடு மற்றும் கடப்பாடு என்பவற்றைப் பயன்படுத்தி புலனாய்வு செய்திகளை உருவாக்கி கண்காணிப்பு அறிக்கையிடலை மேற்கொண்ட உதாரணங்கள் காணப்படுகின்றன.

ஐக்கிய இராச்சியத்தின் புலனாய்வு ஊடகத்துறை நிலையத்தின் இயக்குனர் கவின் மக்பேடைன் இது பற்றிய விடயத்தை தெளிவாக முன்வைத்துள்ளார்: “பாரதூரமான புலனாய்வுகள் வெளிவரும்போது மக்கள் அவற்றைப் பற்றி பேசுகின்றனர். அதிகமானவர்கள் வாய்வழி வார்த்தைகள் மூலம் அவற்றை அறிகின்றனர். விற்பனை அதிகரிக்கின்றது, வாசகர் எண்ணிக்கை உயர்கின்றது, நிகழ்ச்சிகளின் உண்மையான நம்பகத்தன்மை எட்டப்படுகின்றது அத்துடன் மிக முக்கியமாக அவை விசுவாசம் மிக்க பின்தொடர்வோரைப் பெறுகின்றன. குறித்த செய்தி உண்மையாக மக்களைப் பாதிக்கும் போது அவர்கள் அந்த செய்தி பற்றிப் பேசுவதுடன் செய்தியைப் பின் தொடர்கின்றனர். இந்த நிலை அநேகமான நாடுகளில் உண்மையாகக் காணப்படுவதாகத் தெரிகின்றது. இது பத்திரிகைத் துறைக் கலாச்சாரத்தையும் பாதிக்கின்றது. பதிப்பாசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் நவீனத்துடன் பணி புரிவோராக அல்லது போராடுபவர்களாக மாறுகின்றனர். அவர்கள் ஊடகச் சட்டத்தை விடயங்களை மறைப்பதை விட வெளிக்கொண்டுவர எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவைப் பெறுகின்றனர் அத்துடன் அதி தீவிர அறிக்கையிடல் மூலம் வாசகர்கள் மற்றும் பார்வையாளர்கள் வட்டத்தை உருவாக்குகின்றனர்.

இதற்கு மேலதிகமாக புலனாய்வு ஊடகத்துறை ஜனநாயகத்தை கட்டி எழுப்ப உதவுகின்றது. உத்தியோகபூர்வ வெளியீடுகள் புலனாய்வுக்கு உட்படுத்தப்படாத சந்தர்ப்பங்கள் அதிகாரத்தில் உள்ளோர் தமது நிகழ்ச்சி நிரலை உருவாக்க உதவுகின்றன. இந்த வகையான செய்திகள் மேலிடத்தில் உருவாக்கப்பட்டு அடிமட்டங்களை சென்றடைகின்றன. போட்டியிடும் தரப்புகளின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர் நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்கள் கடினமான கேள்விகளை கேட்காத அல்லது தகல்களை மற்றும் பகுப்பாய்வுகளை வழங்காத சந்தர்ப்பங்களில் பங்குபற்றுதல், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட ஜனநாயகக் கொள்கைகள் தோல்வி அடைகின்றன. ஜனநாயகத்தின் வாழ்வுக்கு புலனாய்வு ஊடகவியல் என்பது மேற்கொள்ளப்பட வேண்டிய சரியான விடயமாகும்.

Recommendation
Recommendation

Recommendation