புலனாய்வுச் செய்தி, அச்சு வடிவ செய்திகள் அல்லது தோற்றங்கள் உட்பட்ட எந்த வகை செய்தி உள்ளடக்கம் ஒன்றுக்கு மூன்று அடிப்படை கட்டமைப்புகள் காணப்படுகின்றன:

1. கால வரிசைப்படியான: இந்த வகைக் கட்டமைப்பில் செய்தி நேரத்தின் அடிப்படையில் விரிவாக்கம் அடைகின்றது. புலனாய்வின் பொருட்களாக வரிசை ஒழுங்கு மற்றும் நடவடிக்கைகள் என்பன காணப்படும்.

2. விவரண (narratives) வடிவம்: சூழ்நிலையை நேரத்தின் ஊடாக பின் தொடரும்; இது உண்மையில் புலனாய்வு இடம்பெற்ற விதத்தில் விபரிக்கும்

3. தொடர் செயன்முறைகள் (processes): இந்த வகைக் கட்டமைப்பில் செய்தி பிரச்சனைகள் மற்றும் விவாதங்களைச் சுற்றிச் சுழலும் (குறிப்பிட்ட செய்திக்கு ஏற்ப)

நீங்கள் எழுதுதல் செயற்பாட்டை விடயங்களை பகுதிகளாகப் பிரிப்பதன் மூலம் ஆரம்பிப்பீர்கள். பிரச்சனைகள், யார் பாதிக்கப்பட்டனர், நீங்கள் கண்டறிந்த முரண்பாடுகள் மற்றும் புதிய விடயங்கள் என்பன இந்த பகுதி பிரிப்புக்கு உடபடுத்தப்படும் விடயங்களில் உள்ளடங்குகின்றன. ஒப்பீட்டளவில் எளிமையான சிறிய புலனாய்வுச் செய்தி ஒன்றுக்கு இந்த பகுதிகளுடன் அறிமுகம் மற்றும் முடிவுரை என்பவற்றை இணைப்பது இறுதிச் செய்திக்கான முழுமையான மற்றும் திருப்திகரமான செய்தித் திட்டத்தை வழங்கும்.

பிரச்சனைகள் மற்றும் உண்மைகள் என்பன வாசகர்களின் கவனக் குவிவுப் புள்ளியாக இருப்பதன் காரணமாக புலனாய்வு எழுத்தியலில் இலக்கிய நயம் இரண்டாவது இடத்தையே வகிக்கும்.

உங்களது விடயங்களை ஒரு செய்தி வடிவுக்கு கொண்டுவர பல வித்தியாசமான வழிகள் காணப்படுகின்றன் பல வகை எழுதுதல் செய்முறைக் குறிப்புகள் மற்றும் அணுகுமுறைகளை பயிற்ருனர்கள் புலனாய்வுச் செய்திகளுக்கு பரிந்துரை செய்கின்றனர்கள். உங்களது செய்தி விடயங்கள் வகை மாதிரியான கடின செய்திகளிலும் பார்க்க நீண்டனவாகவும் சிக்கல் தன்மை வாய்ந்தனவாகவும் காணப்படும். அத்துடன் அவற்றுக்கு நீங்கள் வடிவம் மற்றும் கட்டமைப்பு என்பவற்றை வழங்குவதன் மூலம் சிக்கலான தகவல்களின் ஊடாக ஒரு வழியை வழங்குகின்றீர்கள். மிக அதிக அளவில் பொதுவாகக் காணப்படும் மூன்று புலனாய்வுச் செய்திக் கட்டமைப்புகளாவன்:

(A) வோள் ஸ்ட்ரீட் சஞ்சிகை சூத்திரம் இதில் உள்ளடங்குவன

1. சம்பவம் மற்றும் பிரச்சனைகள் இடையான காட்சியை உருவாக்க ஒரு நபர் அல்லது சூழ்நிலையில் இருந்து ஆரம்பித்தல்

2. அந்த தனிப்பட்ட சம்பவத்தில் இருந்து பெரிய பிரச்சனைகளைக் கையாளும் வகையில் விரிவாக்கல். இந்த விரிவாக்கல் அந்தத் தனி நபர் மற்றும் பெரிய பிரச்சனைகள் இடையான தொடர்பை விளக்கும் பந்தி ஒன்றின் மூலமாக மேற்கொள்ளப்படும்.

3. மனிதத் தன்மையுடைய, தாக்கம் மிக்க முடிவு ஒன்றை அடையும் வகையில் உங்களது சம்பவக் கற்கைக்கு மீளுதல்

(B) உயர்ந்த ஐந்துகள் (High Five) அமெரிக்க எழுதுதல் பயிற்றுனர் கரோல் ரிச் பின்வரும் ஐந்து பிரிவுகளை பிரேரித்துள்ளார்;

1. செய்தி (என்ன நடந்தது அல்லது நடக்கின்றது?)

2. சூழமைவு (பின்புலம் என்ன?)

3. பரப்பு எல்லை (அது ஒரு சம்பவமா, உள்ளூர் போக்கு ஒன்றா அல்லது ஒரு தேசிய பிரச்சனையா?)

4. விளிம்பு (அது எங்கே வழிநடத்துகின்றது?)

5. தாக்கம் (உங்களது வாசகர்கள் ஏன் அதில் கவனமெடுக்க வேண்டும்?)

இந்தக் கட்டமைப்புக்கு ஐந்து அலகுகளையும் ஒன்றாக இணைக்கும் வகையிலான சிறந்த நிலைமாற்ற எழுத்து இயலுமைகள் அவசியமாகும். இல்லாவிட்டால், செய்தி ஐந்து கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக காணப்படுவது போல் தோற்றமளிக்கும். எனினும் இது இணையத்தில் வெளியிடப்படும் நீண்ட செய்திகளுக்கு சிறந்த கட்டமைப்பை வழங்கக் கூடியது. ஏனெனில் அங்கு நீங்கள் நீட்டப்பட்ட விவரணத்தினை முகாமைத்துவம் செய்யக்கூடிய பகுதிகளாக பிரிப்பது வாசகர்கள் இலகுவாக வாசிப்பதற்கு துணை புரியும்.

(C) கூம்பகம் (The Pyramid)

பாரமபரிய அச்சு வடிவ செய்தி அணுகுமுறை தலை கீழ்க் கூம்பகமாக (முக்கிய கருத்துக்கள் முதலிலும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆதரவளிக்கு விடயங்கள் பின்னரும் காணப்படும்) காணப்படும் அதே வேளை புலனாய்வுச் செய்திகள் கூம்பக வடிவத்தின் வலது பக்கத்தை மேற்பகுதியில் கொண்டனவாகும். உங்களது முழுமையான செய்தியும் தாக்கத்தை கட்டி எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். அது வாசகர்களை நீங்கள் மேற்கொண்ட கண்டறிதல்கள் ஊடாக வழி நடத்திச் செல்லும்.

1. எனவே நீங்கள் செய்தியின் என்னக்கருச் சுருக்கத்துடன் ஆரம்பிப்பீர்கள்

2. வாசகர்கள் பின்னர் கண்டறியக் கூடிய விடயங்களின் சமிக்ஞைகள் காண்பிக்கப்படும்

3. உங்களது புலனாய்வு வரிசைக் கிராமத்தில் காண்பிக்கப்படும். மர்ம நிலை உயிர்ப்புடன் பேணப்பட்டு ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு அல்லது மர்ம நாவல் எழுதப்படுவது போல் செய்தி மிகவும் அதிர்ச்சி வாய்ந்த அல்லது திடீர் திருப்ப நிலை நோக்கி கட்டி எழுப்பப் படும்.

4. அதி முக்கிய மற்றும் திடீர் திருப்பம் பற்றிய தகவல்கள் இறுதில் வழங்கப்படும்

இந்த ஒவ்வொரு வகை செய்முறை வடிவமும் புனைகதை எழுத்தாளாரின் கருவிப் பெட்டியில் (toolkit) இருந்து சிறுபகுதியை இரவல் பெற்றுள்ளன. நீங்கள் புனை கதை ஒன்றை எழுதவில்லை எனினும் இலக்கியத்தில் இருந்து பெறப்பட்ட உத்திகளைப் பயன்படுத்துகிறீர்கள். அத்துடன் ஒவ்வொரு ஊடவியலாளரும் கதை சொல்லும் நபர்கள் என்பதால் இது நடைமுறையான விடயமே ஆகும். உங்களை ஒரு சொல்பவராக நீங்கள் காண்பது சிறந்த விடயமே, எனினும் முன்னணியில் உள்ள உண்மையான செய்திகள் நவீன செய்தி எழுதுதல் அணுகுமுறையின் அடிப்படையாகக் காணப்படுகின்றன, நாம் இவற்றை விவரண ஊடகவியல் என அழைக்கிறோம்.

எழுத்தாளர் சூசன் ஈடன் இன் கருத்தின்படி “விவரண எழுத்தாளர்கள் தாம் மேற்கொண்ட அனைத்து பணிகளுக்குமான அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் வரிசை ஒழுங்கு மற்றும் புதிர்ப் பகுதிகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டுள்ளனர். அவர்கள் அனைத்தையும் பல கண்ணோட்டங்களில் இருந்து கருத்தில் கொண்டுள்ளனர். அவர்கள் கல்வியியல் இலக்கியத்தை வாசித்துள்ளனர். அவர்கள் வாசகர்களுக்கு விடயத்தை விளக்கும் வகையில் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து செய்தியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் அனைத்து விடயங்களையும் ஒரு வரிசை ஒழுங்கில் இணைத்து ஒரு பொருளை வழங்கியுள்ளனர். (….) இதை மேற்கொள்வது உங்களுக்கு அதிகாரத்தை வழங்குவதுடன் எந்தக் கொள்கை சிறந்தது என்று சொல்வது அவசியமல்ல. (….) எனினும் குறிப்பாக விடயத்தின் இதயத்தை பெயரிடுவதாகும். (….) இது செய்தி ஊடகம் தமது கருத்தை வெளியிடுவதில் இருந்து வேற்பட்டது. (….) நீங்கள் உங்களை மக்கள் குழப்பங்களின் ஊடாக பயணிப்பதற்கு உதவும் வழிகாட்டியாக கற்பனை செய்கிறீர்கள்.”

இரண்டு விபரிப்புகளும் விவரண அணுகுமுறை புலனாய்வு ஊடகவியலுக்கென உருவாக்கப்பட்டது என்ற தோற்றப்பாட்டையே தருகின்றன. எனினும் ஒரு எச்சரிக்கை உள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு ஊடகவியலாளர் டானி செச்டர் அமெரிக்க அரசின் ஈராக் யுத்தம் பற்றிய தனது திரைப்படமான Weapons of Mass Deception என்ற திரைப்படத்தில் கதை சொல்லல் அணுகுமுறையில் உள்ள முக்கிய பிரச்சனை ஒன்றைக் குறிப்பிடுகிறார்; தனிப்பட்ட நபர்களின் கதைகளில் கவனக் குவிவைக் கொள்வதன் மூலமாக விவரண அணுகுமுறை சில அமெரிக்க செய்தி ஊடகங்கள் மிகவும் விவாதத்துக்கு உரிய பிரச்சனைகள் மற்றும் விவாதங்களை புறக்கணிப்பதை சாத்தியமாக்கியது. இது விவரண அணுகுமுறையின் பெறுமதியை குறைக்கவில்லை. ஏனைய எந்த ஒரு எழுதுதல் உத்தி போன்று கதை சொல்லல் அணுகுமுறையும் விழிப்புடனும் திறனுடனும் பொருத்தமான சூழமைவினுள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் மாத்திரமே ஆகும்.

விவரண ஊடகவியலில் உள்ளடங்குகின்ற கருவிகளில் சில

உருவப்படங்கள் மற்றும் காட்சிச் சூழல்: நீங்கள் வாள் ஸ்ட்ரீட் சஞ்சிகையின் அணுகுமுறையைத் தெரிவு செய்தால், புலனாய்வுத் தொடர் செயன்முறை முழுவதும் விபரங்களைத் தேடும் ஆர்வம் மிக்க கண்களைக் கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய முக்கிய தகவல் மூலத்தினை அல்லது காட்சியை வாசகர்கள் உண்மையானது என உணர மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விபரிக்க வேண்டும். இதன் கருத்து அனைத்தையும் வலி மிக்க வகையில் ஆவணமாக்க வேண்டும் என்பதல்ல (அதற்கான இடமும் காணப்படாது), எனினும் இதன் கருத்து உங்களது செய்தியை செறிவாக்கும் வகையில் சில நம்பகமான முக்கிய விபரங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

சாடைக் குறிப்பு (hint) மற்றும் துப்புகள் (clue): புலனாய்வுச் செய்தி ஒன்றை எழுதும் வேளை உங்களது வாசகர்களுக்கு குறித்த செய்தி எதை நோக்கி நகர்கிறது என்பதைக் காண்பிக்க சாடைக் குறிப்புகள் மற்றும் துப்புகள் செய்தியின் தொடக்கத்தில் வழங்கப்படுவது முக்கியமானதாகும். நீங்கள் கூம்பக வடிவத்தை தேர்ந்தெடுத்திருந்தால் இதை நீங்கள் குறிப்பாகப் பயன்படுத்த வேண்டும். உங்களது செய்தியின் இறுதிக் கண்டுபிடிப்புகளை சொல்லும் வரை வாசகர்களை செய்தி தொடர்பில் ஆவலுடன் வைத்திருக்கத் தேவையான அளவில் மாத்திரம் இவை வழங்கப்படுவது போதுமானது.

வேகம், கட்டமைப்பு, வார்த்தைகள்: எழுதப்படும் செய்திகளின் வேகம் முக்கியமானது என்பதை நினைவில் நிலை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு விவரண நகர்வும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் மற்றும் கட்டமைப்பு என்பனவே செய்தி எவ்வளவு விரைவாக அல்லது மெதுவாக நகர்கின்றது என்பதைத் தீர்மானிக்கும். குறுகிய வார்த்தைகள் மற்றும் வசனங்கள் என்பன செய்தியின் வேகத்தை அதிகரிக்கின்றன. நீண்ட வசனங்கள் வேகத்தைக் குறைக்கின்றன. வசனங்கள் குறுகியதாக இருப்பினும், ஒரு பந்தியில் அதிகளவான தொழில்நுட்ப தகவல்களை வழங்குதல் வாசகர்களை மெதுவாக நகர வைக்கும். தேவையற்ற, அளவுக்கு அதிகமான பின்புலம் மற்றும் சூழமைவு என்பன நீங்கள் செய்தியை சொல்லி முடிப்பதற்கு அதிக நேரத்துக்கு முன்னரே நிறுத்தத்துக்கு கொண்டு வந்து விடும். இதனை நீங்கள் எப்போதும் உங்களிடம் கேளுங்கள்: இந்த வார்த்தைகள் உண்மையில் செய்திக்கு பெறுமதி சேர்க்கின்றனவா அல்லது இவை வெறுமனே மேலதிக வார்த்தைகளா? செய்திக்கு தேவையற்ற மொழிநடைகளை நீக்கி விடுங்கள்.

உங்களது செய்தியை நீங்களே வாசிக்கும் பொழுது விவரணத்தின் வேகம் மற்றும் ஓட்டம் என்பவற்றை உணர்வீர்கள். எனினும், எங்கே செய்தி மெதுவாக மாத்திரமன்றி ஆர்வம் இழத்தல் மற்றும் கடினத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும் உங்களால் அறிய முடியும். உங்களது காதுகள் சிறந்த தொகுத்து அமைப்பவர் ஆகும். அத்துடன் அது உங்களது ஆக்கத்தை வாசிப்பது தடுமாற்றத்தை ஏற்படுத்தும் நீங்கள் ஒரு எழுத்தாளராக எங்கே இயற்கையான மனிதக் குரலை இழந்துள்ளீர்கள் அல்லது மொழிநடை எங்கே மிக நீளமாக, சிக்கலாக மற்றும் பிழையாக உள்ளது என்பவற்றை உங்களுக்குக் கூறும். உரையாடல் முறையில், நீங்கள் கதைப்பது போன்றே செய்தியை எழுதுங்கள். இதன் மூலம் வாசகர்கள் உங்களது குரலை உணர்ந்து கொள்வார்கள். எனினும் பேச்சில் உள்ள தொனி, முகபாவம், கண் தொடர்பு மற்றும் வெளிப்பாடுகள் என்பன காணப்படும். அவற்றை எழுத்தின் மூலமாக பரிமாற்றம் செய்ய முடியாது, உங்களது எழுத்தை திருத்தி அமைக்க வேண்டும். சரியான இலக்கணம் மற்றும் நிறுத்தற் குறிகள் என்பன உங்களது எழுத்துக்கு தொனி, அழுத்தம் மற்றும் நளினம் என்பவற்றை வழங்குகின்றன் அவை கைகள், கண்கள் மற்றும் முகத்தின் தசைகள் மேற்கொள்ளும் பணிகளை காகிதத்தில் மேற்கொள்கின்றன.