1.3.2. கட்புலனாக (visually) சிந்தித்தல்


விவரண அணுகுமுறைக்கு தேவையான நினைவுக்காட்சி மற்றும் திருப்பம் மிக்க தருணங்களைப் பெறுவதற்கான ஒரு வழி கட்புல ரீதியாக சிந்தித்தல் ஆகும்: வடிவமைப்பு மற்றும் அமைவு என்பன வற்றின் பொறுப்பு உங்களைச் சாராத போதும் இறுதிச் செய்திக்கு தேவையான படங்கள் மற்றும் விளக்கப்படங்கள் பற்றி கருத்தில் கொள்ளுங்கள். செய்திக்கு வழங்கக் கூடிய தற்காலிக போன்ற (உணமையான தலைப்பை உப ஆசிரியர் எழுதிய போதும்) விடயங்கள் உங்களது செய்திக் கருப் பொருளில் கவனக் குவிவைக் கொண்டிருக்க உதவுவதோடு அதை உங்களது செய்தி பற்றியொழுகுவதை உறுதி செய்யும். சில உண்மைகளை வரைபு ஒன்றின் மூலம் வெளிப்படுத்த நீங்கள் திட்டமிட்டிருப்பின் அது அந்த உண்மைகளின் சுவாரசியமற்ற உண்மைகளின் பட்டியல் ஒன்று எழுதப் படுவதில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். எவ்வாறாயினும் கட்புல ரீதியான சிந்தனை உங்களது இறுதிச் செய்திக்கு வேறு வழிகளிலும் துணை புரியும்:

  • அது உங்களது செய்தி வடிவத்தை சமர்ப்பிப்பதில் உதவும். அது உங்களின் செய்திக்கு தேவையான வரைபடங்கள், அட்டவணைகள், வரைபுகள் அல்லது படங்கள் பற்றிய முன் அறிவித்தலை வழங்கும்.
  • செய்தியின் வடிவமைப்பு மற்றும் அமைவு தொடர்பான நபர்களுக்கு உதவுவதன் காரணமாக் அது குழுப்பணிக்கு அது துணை புரிகின்றது.
  • அது விசேடமாக் புகைப்படக் கலை நபர்களுடனான உங்களது குழுப்பணியில் துணை புர்கின்றது. செய்திக்கு தேவையான சிறந்த புகைப்படங்கள் மற்றும் அவர்களது நிபுணத்துவத்தை எந்த இடத்தில் பயன்படுத்தலாம் என்பது போன்ற உரையாடல்களுக்கான அடிப்படையை அது வழங்குகின்றது.
  • அது படங்களை உங்களின் தலைக்குள் செலுத்துவதால் அவற்றை பின்னர் நீங்கள் வார்த்தைகளால் வரைய முட்யும். உதாரணமாக, காட்சி அமைப்பு அறிமுகம்.
  • அது வாசகர்களுடன் சிறப்பாக தொடர்பாட உதவுகின்றது, அவர்கள் தனியே எழுத்தக்களில் இருந்து கற்பதை விட சிறப்பாக தெரிவு செய்யப்பட்ட படங்கள் அல்லது திருப்பம் மிக்க அட்டவணைகள் மூலம் அதிகமாகக் கற்கின்றனர். ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமானது என்றொரு பழமொழியும் உண்டு.