1.3.3. இணைப்புகள் மற்றும் முடிவுகள்


அனைத்துச் செய்திகளும் சிறந்த ஆரம்பம் மற்றும் முடிவு என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஒரு எழுத்தாக்கத்தினதும் உறுதி வாய்ந்த பகுதிகளாக ஆரம்பம் மற்றும் முடிவு என்பன காணப்படுகின்றன. ஒரு சிறந்த அறிமுகம் வாசகர்களை ஈர்த்து முழுச் செய்தியையும் நோக்குவதற்கான சட்டக வடிவம் ஒன்றை வழங்குகின்றது. அநேகமான ஆய்வுகள், செய்தி ஒன்றின் அறிமுகம் சிறப்பாக அமையாத பட்சத்தில் எந்தத் தலைப்பாக இருப்பினும் வாசகர்கள் அதைத் தொடர்ந்து வாசிப்பதில்லை என்பதை நிஷரூபித்துள்ளன. அதேபோல், முடிவு என்பது வாசகர்கள் செய்தியில் இருந்து எடுத்துச் செல்லும் கருத்தாகும்.

ஆரம்பிப்பதற்கான வழிகளில் பின்வருவன உள்ளடங்குகின்றன்:

  • உருவப்படம் அல்லது காட்சி அமைப்பு
  • செய்தியின் கருப்பொருள் சுருக்கம் ஒரு சிறிய வசனத்தில் (ஒட்டு மொத்த செய்தியும் அல்ல)
  • அடைவுகள் அல்லது பாதிப்புகள். அதன் பின்ன்ர் அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூற மீண்டும் வர முடியும்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாசகருக்கு செய்தி எதைப்பற்றியது என்பது சொல்லப்பட அதிக நேரம் எடுக்க வேண்டாம். செய்தியின் அறிமுகம் மொத்த செய்தியின் 10% மேற்படக்கூடாது என்பது சிறந்ததோர் அடிப்படை விதியாகும். எனினும் பின்வருவதைப் பற்றி சிந்திக்க வேண்டாம்; (புத்தக சொற்பதம் ஒன்றைப் பயன்படுத்த) ஒரு தாமதிக்கப்பட்ட வழிகாட்டி. உங்கள்து செய்தி எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்க வேண்டும். அது உண்மைகளின் பட்டியல் ஒன்றைக் கொண்டுதான் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில்லை.

உங்களது முடிவுப் பகுதியும் அதே வழியில்தான் செயற்படுகின்றது; திருப்திகரமான முடிவுப் பகுதி பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்:

  • தொய்வான முடிவுகள் இறுக்கமாக்கப் படல் (வகிபாகங்களுக்கு என்ன நடந்தது அல்லது அடுத்து என்ன நிகழும்)
  • நாம் ஏன் இதில் ஆர்வம் கொண்டோம் எனக் காண்பிக்க கருப்பொருளை மீண்டும் ஒருமுறை சுருக்கமாக வழங்குதல்
  • ஒரு உதைப்பவரை உருவாக்குதல் (சிந்திக்க வைப்பதற்கான அருட்டலை ஏற்படுத்தல்)
  • சூழமைவை அழுத்திக் கூறுதல். பிரச்னையை அதன் சூழலில் பொருத்தி விட்டு வாசகர்களுக்கு நம்பிக்கைகள், தடைகள் மற்றும் இணைக்கப்பட்ட புதிய மாற்றங்கள் என்பவற்றை நினைவூட்டல்.
  • நாம் ஆரம்பத்தில் சந்தித்த மனிதர்களிடம் மீண்டும் சென்று, அவர்களை இறுதி வார்த்தையைச் சொல்ல வைத்தல்

முளுமையாக்கத்தை நோக்கமாகக் கொண்டு முடிவொன்றை எழுத வேண்டாம். அத்துடன் வாசகர்களுக்கு – வேறு வார்த்தை வடிவங்களின் ஊடாகக் கூட – காலம் மாத்திரமே பதில் சொல்லும் எனச் சொல்ல வேண்டாம். நீங்கள்தான் புலனாய்வாளர், ஒரு திடமான தீர்வு ஒன்று இல்லாமல் செய்தியை நிறைவு செய்யும் பட்சத்தில் நீங்கள் வாசகர்கள் உங்களது அதிகாரத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை தகர்க்கிண்றீர்கள்.

உங்களது செய்தியை ஒன்றாக இணைத்து வைத்திருப்பதில் நிலை மாற்றங்கள் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தன. அதாவது, உங்களது செய்தி ஒரு பிரிவில் இருந்து அடுத்த பிரிவுக்கு மற்றும் ஒரு பந்தியில் இருந்து அடுத்த பந்திக்கு மாறுவதே நிலை மாற்றமாகும். ஒருங்கிணைந்த விவரணம் ஒன்றை உருவாக்குவதற்கு காணப்படும் மிகவும் பயனுள்ள உத்திகள் ஆவன:

  • தலைப்பை ஒழுங்காகக் குறிப்பிடுங்கள்
  • யோசனைகளை ஒன்றாக இணைப்பதற்கு மற்றும் அவற்றை தெளிவாக்குவதற்கு விரிவாக்கப்பட்ட உவமைகளைப் பயன்படுத்துங்கள். உதாரணமாக, சூழலை நீங்கள் மனித உடலுக்கு ஒப்பிடலாம், அங்கு அணைத்து பாகங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
  • உங்களது செய்தியில் நூலிழை போல ஓடிக் கொண்டிருக்கும் விடயம் ஒன்றுக்கு படம், பொருள், பழமொழி அல்லது தகவமைதரு (Adaptable) விடயம் ஒன்றைப் பயன்படுத்துங்கள்
  • நீங்கள் சிக்கலான விவாதம் ஒன்றை வழங்கும் போது வாசகர்களை உங்களுடன் நிறுத்தி வைத்திருக்க எளிமையான வார்த்தைகள் மிகவும் பலம் வாய்ந்தவையாக அமையும். முன்னுள்ள பந்தி பின் பந்தியுடன் தொடர்புறுகிறதா எனக் காண்பிக்க (“அத்துடன்”), திசையை மாற்றும் போது (“ஆனால்”), விளைவைக் காண்பிக்க (“எனவே”), பின் தொடர்ந்தால் (“பின்னர்”) அதிகமான சமிக்ஞை வார்த்தைகளை பாவிக்கவும்.

உங்களது ஆரம்ப வரைவை எழுதிய பின்னர் உங்களது செய்தி இன்னும் முழுமை அடைந்திருக்காது; அது ஒரு நீண்ட கால அடிப்படையான செய்தியாகும். இந்த இற்றை செய்யும் தருணத்தில் செய்ய வேண்டிய முக்கியமான விடயம் உங்களது அறிக்கையிடல் தொடர் செயற்பாட்டின் ஆரம்பத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இன்னும் செல்லுபடியாகக் காணப்படுகின்றனவா அத்துடன் புதிய கண்டுபிடிப்புகளால் அவை மாற்றமடையவில்லையா எனச் சோதிப்பதாகும். அதே போல், புதிய உண்மைகள், அறிவியல் அறிக்கைகள் அல்லது சோதனை முடிவுகள் புதிதாக வெளிவந்திருக்கக் கூடும். உங்களது இணையத் தேடலை மீள மேற்கொள்ளுதல் கூடப் பெறுமதியானது. அந்த இரண்டு கை விளம்பரங்களிலும் காணப்படும் வார்த்தைகளை வாசிப்பது பாரிய விடயமாகக் காணப்படலாம். செய்தியை நீங்கள் பெட்டி ஒன்றினுள் அல்லது பக்கவாட்டில் கொண்டிருக்க முடியும். எவ்வாறாயினும், மிகச் சிறந்த செய்திகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வரைவுக்கு உட்படுகின்றன. உங்களது எழுத்தை தொகுத்து அமைப்பது மேலதிகமான விடயமோ, மேலதிக வேலையோ அல்ல, அது உங்களால் முடிந்த சாத்தியமான சிறந்த செய்தியை எழுதும் தொடர் செயன்முறையின் பகுதியாகும். மீள வரைவாக்கல் அண்ட் தொகுத்து அமைத்தல் என்பவற்றை தனியாக மேற்கொள்ளுதல் கடினமாக இருப்பின் சகபாடி அல்லது குழு உறுப்பினர் ஒருவரை இந்த பணிகளுக்கு உதவியாயகப் பெற்றுக் கொள்ளுங்கள். சிறந்த யோசனைகள் குழுப்பணி மூலமே கிடைக்கின்றன.