3.1. ஒருவர் விடையளிக்க மறுப்பதை உங்களின் செய்தியின் பகுதியாகப் பயன்படுத்தல்

3.1. ஒருவர் விடையளிக்க மறுப்பதை உங்களின் செய்தியின் பகுதியாகப் பயன்படுத்தல்


தகவல் மூலம் ஒன்று உங்களுக்கு விடையளிக்க விரும்பாத பட்சத்தில் அதை அவ்வாறே கூறுங்கள். இந்த சாத்தியத்தினை எதிர் நோக்க நீங்கள் தயாராகவும் ஒத்திகை பார்த்தவராகவும் இருக்க வேண்டும். வானொலி அல்லது தொலைக்காட்சிக்கான ஒளிப்பதிவில், அவர்களின் விடையளிப்பதற்கான மறுப்பு, அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூறினாலும் அதைக் கேட்க முடிவதோடு உங்களது மட்டறுத்தலில் (edit) அது வினைத்திறனுடன் பயன்படுத்தப்படலாம். உங்களது அச்சு வடிவச் செய்தியில் நீங்கள் பின்வருமாறு எழுதலாம்: X பின்வரும் விடயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்க மறுத்து விட்டார்….. நீங்கள் அதை எழுதும் போது அவர்கள் விடையளிக்க மறுத்ததை விளக்க முயற்சிக்காது அத வெறுமனே அறிக்கையிடல் மாத்திரம் செய்ய வேண்டும். அவர்களின் மருப்பின் அர்த்தத்தை வாசகர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்.

முறையாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க மிகத் தெளிவாக மறுக்கப்படல் உங்களை நேர்காணலைக் கைவிடத் தூண்டும். “என்னை மன்னிக்க வேண்டும் அமைச்சர் அவர்களே, எனது செய்தியின் பிரதான விடயங்களில் உங்களிடம் உள்ளீடுகள் இருக்காது என நான் எதிர்பார்க்கவில்லை”. “என்னிடம் தற்பொழுது எனது அவதானிப்புகள், துறைசார் வல்லுனர்கள் மற்றும் சாட்சியங்களின் கருத்துகள் மாத்திரமே செய்தி தொடர்பில் பணி புரியக் காணப்படுகின்றது” “எனது வாசகர்களுக்கு உங்களால் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறலாமா?” எனக் கேட்கலாம். மதி நுட்பம் வாய்ந்த ஊடகவியலாளர்கள் அந்த இடத்தில் செய்தியை இடை நிறுத்துவதை விடுத்து ஏதாவது கூற முடிவெடுப்பார்கள். எனினும், அவர்கள் ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அமைதியாக வெளியேறுங்கள்.

குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட மாட்டாது என உங்களுக்கு முன்னரே உங்களுக்கு சொல்லப்பட்டிருந்தால் அவ்வகையான அனைத்து கேள்விகளையும் பாரபட்சமின்றி நீக்குவது சிறந்தது அத்துடன் அதைத் தெளிவாகக் கூறுங்கள்.. இது விசேடமாக ஒளிபரப்பின் போது உண்மையாகும். உங்களது நேயர்கள் மற்றும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படும் நபர் ஆகிய இரண்டு தரப்பாரும் குறைந்த பட்சம் அவற்றை அறிய நீங்கள் முயற்சி மேற்கொண்டீர்கள் என அறிய இது உதவும். அவற்றை நீங்கள் கூறாது விட்டால் அவ்வாறான கேள்விகள் ஒரு போதும் முன்வைக்கப்படவில்லை என்ற விமர்சனத்துக்கு நீங்கள் ஆளாக நேரிடும். அத்துடன் நீங்கள் நேர்காணலுக்கு உட்படுத்தும் நபர் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தான் விடயளித்திருப்பேன் எனக் கூறவும் சந்தர்ப்பம் உண்டு. இது ஒரு கெட்ட தோற்றத்தை உருவாக்கும்.