அத்தியாயங்கள்

அத்தியாயம் 1

யார் அந்த புலனாய்வு ஊடகவியலாளர்?

இந்த அத்தியாயம் புலனாய்வு ஊடகத்துறை செயற்பாட்டை வரையறுப்பதோடு அதன் குறிக்கோள் மற்றும் நோக்கங்கள் என்பவற்றை எடுத்தியம்புகிறது. அத்துடன் இங்கு வழமையான ஊடகவியல் மற்றும் புலனாய்வு ஊடகத்துறை என்பவற்றின் இடையே காணப்படும் வேறுபாடுகளின் மீதான பிரதிபலிப்புகளை தருகின்றது. மேலும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் கொண்டிருக்க வேண்டிய திறன்கள் மற்றும் தரங்கள் என்பனவற்றுடன் புலனாய்வு அறிக்கையிடலுக்கு பொருத்தமான குறிப்பிட்ட தலைப்புகள் மற்றும் அணுகுமுறைகள் என்பனவும் இந்த அத்தியாயத்தில் கலந்துரையாடப்படுகின்றன.

Read more
அத்தியாயம் 2

செய்தி ஒன்றைக் கண்டு பிடிக்கத் தயாராகுதல்!

ஒவ்வொரு செய்தியும் ஒரு எண்ணக்கரு ஒன்றுடனேயே ஆரம்பமாகும் அத்துடன் இந்த அத்தியாயம் அந்த எண்ணக்கரு எங்கு உருவாகின்றன என விளக்குகின்றது. அந்த எண்ணக்கருக்கள் செய்திப்பத்திரிகைகள், தகவல் மூலங்களுடன் உரையாடுதல், செல்வாக்கு மிக்க நபர்களை சந்தித்தல் அல்லது பரந்து பட்ட புதிய விடயங்களைக் கண்காணித்தல் என்பவற்றின் ஊடாக உருவாகலாம். அத்துடன் இந்த அத்தியாயம் சமூக வலைப்பின்னல் தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றன புதிய செய்தி வெளியீடு மற்றும் அதன் தொடர்ச்சி என்பவற்றைக் கண்காணிப்பதில் எவ்வாறு முக்கியத்துவம் மிக்க […]

Read more
அத்தியாயம் 3

திட்டம் ஒன்றை உருவாக்குதல்

இந்த அத்தியாயம் புலனாய்வு செய்தித் திட்டமிடலில் உள்ள படிநிலைகள் பற்றிய விளக்கத்தை வழங்குகின்றது. உங்களிடம் நீங்களே கேள்வி கேட்பது, உங்களது தகவல் மூலங்களை கேள்விகள் மூலம் தூண்டுவதில் தொடங்கி பாதீடு (வரவு-செலவு) உருவாக்கம் என்பவை பற்றி விளக்குகின்றது. இந்த அத்தியாயத்தில் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உதாரணமும் புலனாய்வு அறிக்கையிடல் திட்டத்தில் திட்டமிடல் மிக முக்கியமானது என்பதை விளக்குகின்றது. அத்துடன் நம்பகத்தன்மை வாய்ந்த மூலங்களை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் செய்தி விபரங்களை சுவாரசியம் மிக்க செய்தியாக சான்று அடிப்படை […]

Read more
அத்தியாயம் 4

தகவல் பாதுகாப்புக்கான உத்திகள்

புலனாய்வு ஊடகவியலாளர்கள் தமது ஆய்வின் போது பாரிய அளவிலான தகவல்களை சேகரிக்கிறார்கள் மற்றும் உருவாக்குகிறார்கள். இவற்றில் அநேகமானவை கையடக்க அல்லது கணணி உபகரணங்களில் சேமிக்கப்படுகின்றன. டிஜிட்டல் அடிப்படை தகவல்களைக் கையாளும் போது அவற்றை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பாதுகாப்பு அபாய நேரிடர்களை எவ்வாறு அகற்றுவது என தெரிந்திருப்பது அவசியமாகும். புலனாய்வு ஒன்றின் போது அனைத்து வேளைகளிலும் மூலங்களுடனான தொடர்பாடல் பாதுகாப்பானது என உறுதிப்படுத்துவது பிரதான கரிசனையாகும். இந்த அத்தியாயம் டிஜிட்டல் பாதுகாப்பு அபாய நேரிடர்கள் பற்றி கலந்துரையாடுவதோடு […]

Read more
அத்தியாயம் 7

சரியான கேள்விகளைக் கேட்டல்

புலனாய்வு அல்லது ஏனைய வகை ஊடகத்துறையில் நேர்காணல்கள் முக்கிய அலகாகக் காணப்படுகின்றன. எனினும் புலனாய்வு ஊடகத்துறையில் நேர்காணல்களுக்கு அதிக தயார்படுத்தல், உங்களது செய்தி மற்றும் தகவல் மூலங்கள் பற்றிய சிறந்த புரிதல் அவசியம், எனவேதான் அதற்கேற்ப உங்களால் கேள்விகளைக் கேட்க முடியும். புலனாய்வு ஊடகவியல் உணர்திறன் மிக்கதாக, நற்பெயர்களை தகர்க்கக் கூடியதாக அல்லது அவை இரண்டையும் ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடியதாக அமைய முடியும். இதன் காரணமாகவே உங்களின் நேர்காணல் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்த மேம்பாட்டின் […]

Read more
அத்தியாயம் 8

செய்தியை எழுதுதல்

புத்தி சாதுரியமாக புலனாய்வு செய்யப்பட்ட செய்தி ஒன்று நன்றாக ஒழுங்குபடுத்தப்படாமல் மற்றும் நன்றாக எழுதப்படாமல் இருக்கும் பட்சத்தில் சுவையற்றதாக மாறிவிடும். அந்த செய்தி வாசகர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும், எனவே உண்மைகள் கொண்டதாகக் காணப்படுவதுடன் நேரத்துக்கு வழங்கப்பட வேண்டும். உங்களுடைய புலனாய்வை நம்புகின்ற தொடர்புடைய மற்றும் முக்கியமான நபர்களின் கூற்றுக்களை செய்தி கொண்டிருப்பது உங்களது செய்திக்கு கண்ணியத்தை வழங்கும். உங்களது புலனாய்வின் சிக்கல் மிகுந்த விடயங்களை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வரைபுகள், அட்டவணைகள் மற்றும் படங்கள் […]

Read more