3.2. சர்ச்சையை தூரப்படுத்துங்கள்


அதிகமான அரசாங்கங்கள் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டுள்ளன. நாம் இதனை எவ்வாறு கையாளலாம்? நீங்கள் பின்வருவன போன்ற கேள்விகளைக் கேட்க முடியமு. “இதுவரை எனது நேர்காணல்கள் …. விடயத்தில் முரண்படும் நோக்குகளைக் கொடுள்ளன, நாம்…?” “எனது செய்தி ஆசிரியர் நான் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்காமல் வெளியேறக் கூடாது என வற்புறுத்துகிறார்….? மரத்தைக் குலுக்குங்கள், எனினும் பொய்களைக் கூற வேண்டாம் அல்லது ஏனைய தகவல் மூலங்களை அடையாளம் காணுங்கள். உதாரணமாக, பின்வருமாறு நீங்கள் கூறலாம்; “நீங்கள் இதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டக் கூடும், உங்களை …. இடத்தில் பார்த்ததாக எனது இன்னொரு தகவல் மூலம் கூறியது….” “அவ்வாறு ஒரு வதந்தி நிலவுகின்றது, எனினும் வதந்திகளில் எந்த அளவுக்கு தங்கி இருக்க முடியாது என நாம் அனைவரும் அறிவோம்”. “…கான உங்களது திட்ட முன்மொழிவுகள் எவை?”.