3. திரித்துக் கூறும் நபர்களை (Spin Doctors) எவ்வாறு கையாள்வது?

3. திரித்துக் கூறும் நபர்களை (Spin Doctors) எவ்வாறு கையாள்வது?


திரித்துக் கூறும் நபர்கள் (உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகள்) நிருபர்கள் மற்றும் பொது மக்களுடன் இடைஈடாடலில் அதிகரித்து வரும் வகிபாகம் ஒன்றைக் கொண்டுள்ளனர். சிலவேளைகளில் அவர்கள் நேர்காணல் இடம்பெறும் இடத்தில் அமர்ந்து கொண்டு கேள்வி எழுப்பப்படக் கூடாத விடயங்களின் முன் பட்டியல் ஒன்றைக் கூட வழங்குகிறார்கள்.

ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் நிருபரான டெனிஸ் பார்க்கர் ஐக்கிய இராச்சிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவரிடம் இருந்து (வியப்பற்ற வகையில் அவர் பெயர் குறிப்பிடப்பட விரும்பவில்லை) திரித்துக் கூறும் நபர்கள் பற்றிய பின்வரும் உள்நோக்கை பெற்றார்: அவர்கள் கூறும் சாக்குப் போக்குகள் உண்மையாக இருக்கக் கூடும் எனினும் அவை சாக்குப் போக்குகளே ஆகும் அத்துடன் அவற்றை சவாலுக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு. “உன்னால் எனக்கு கூற முடியா விட்டால், யார் எனக்குக் கூறுவார்கள்?” என்பது இது தொடர்பில் உள்ள பயன் மிக்க கேள்வியாகும். அநேகமான சந்தர்ப்பங்களில், நீங்கள் கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரத் தரப்பு மேலிடத்தின் கட்டளைகளின் கீழ் காணப்படக் கூடும். அல்லது, குறிப்பிட்ட சில தகவல்கள் வளங்கப்ட்டிருக்காமல் இருக்கக் கூடும். வேறு வார்த்தைகளால் கூறுவதானால், அவர்கள் ஒரு விடயத்தை நியாயப் படுத்தும் போதும் வேறொரு விடயத்தை உதாசீனப் படுத்தும் போதும், தமது பணியையே அவர்கள் நிறைவேற்றுகின்றனர். எனினும் அது உத்தியோக பூர்வ பேச்சாளர்களின் பிரச்சனையே அன்றி உங்களது பிரச்சனை அல்ல. மிகவும் அசாத்தியமான சூழ்நிலைகளைத் தவிர, அரசாங்கங்கள் தவறிழைத்தாலும் கூட அவை குறை கூறப்படுவதை அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளவையாகும். பேச்சாளருக்கு நேர்மறையான செய்தி ஒன்றுடன் அவன் அல்லது அவள் திறந்து பேசக் கூடிய எதிர்மறையான விடயம் ஒன்றையும் இணைத்து வழங்கும் வாய்ப்பை வழங்குங்கள்.

நிருபர்கள் சிவில் சமூகம் முக்கியமானது என நினைக்கும் விடயங்கள் தொடர்பில் கரிசனை கொண்டவர்கள். அவை அரசாங்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அல்லாதவிடத்து அது ஒரு சட்ட ரீதியான கரிசனையே ஆகும். பின்வருமாறு கேளுங்கள்: நீங்கள் ஏன் இதைக் கலந்துரையாட முடியாது? ஏன் இது பற்றி அரசாங்கம் அதிக கவலை கொள்ளவில்லை? அரசாங்கத்தின் முன்னுரிமைகளே நிருபர் ஒருவரின் முன்னுரிமையாக அமைய வேண்டும் என்பதில்லை. அரசாங்கம் பெரிய கரிசனைகளைக் கொண்டிருக்கக் கூடும். பேச்சாளர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் விடயம் குறிப்பான விடயங்கள் தொடர்பில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுவதே ஆகும்; அவர்கள் அவற்றை தவிர்ப்பதை தமது பணியாக நோக்குகின்றனர்.

போராட்ட குணம் கொண்ட பயிலுனர் நிருபர்களைத் திருப்திப்படுத்துவது விடயங்களை நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த நிதானம் மிக்க நிருபர்களை திருப்திப் படுத்துவதிலும் பார்க்க இலகுவானதாகும். பேச்சாளர்கள், நிருபர்கள் பின் தொடரம் கேள்விகளைக் கேட்க மாட்டார்கள் மற்றும் பொதுவான விடயங்களை கூறும் பொழுது திருப்தி அடைவார்கள் என எதிர்பார்ப்பார்கள். “இந்த விடயத்தில் ஒரு செய்தித் தலைப்பு இல்லை” என அவர்கள் நினைத்த மறு நொடியில் இருந்து குறித்த விடயம் தொடர்பான தமது ஆர்வ மட்டங்களை அவர்கள் வேண்டுமென்றே குறைப்பதை நீங்கள் காண முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் செய்தி ஒன்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறுவதன் மூலம் பரபரப்பை தேடும் நிருபர்களைத் திசை திருப்புவது முக்கியமான சுழல் உத்தியாகும். உண்மைகள் அலுப்பு மிக்கனவாகக் காணப்பட்ட போதும் புதிய தகவல்களைத் தேடுவதில் மற்றும் அவற்றை பாதுகாப்பதில் கவனக் குவிவைக் கொண்ட ஊடகவியலாளர்கள் சிறந்த செய்தி ஒன்றைப் பெறக் கூடும்.

உங்களது தகவல் பிழையானது எனக் கூறப்பட்டாலும், அது பிழையானது எனக் கருத வேண்டாம். பின்வருமாறு கூறத் தயாராக இருங்கள்: நான் கூறியது பிழை எனின் நான் மன்னிப்புக் கோருகிறேன், எனினும்….. அத்துடன் நீங்கள் வற்புறுத்திய விடயத்தை நன்கு ஆய்வுக்கு உட்படுத்திய உண்மைகளைத் துணையாகக் கொண்டு தொடர்ந்து செல்லும் கேள்வியாகக் கேளுங்கள். அவர்கள் கேள்வியைத் திருப்பினால், மீண்டும் கேளுங்கள். சில திரிபு படுத்தும் பேச்சாளர்கள் உங்களது விசாரணையை அவர்களது கேள்வி ஒன்றின் மூலமாக திசை திருப்புவார்கள். உதாரணமாக, திருமண பந்தத்தில் உள்ள அமைச்சர் இன்னொரு பெண் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுவது உண்மையா? என நீங்கள் கேட்கும் வேளை அவர்கள் உங்களிடம் “ஏன் நிருபர்களின் மனதில் இந்த விடயமே காணப்படுகின்றது? கேட்கக் கூடும். அதற்கு நீங்கள், திரு பேச்சாளர் அவர்களே, ஊடகவியலாளர்களின் பார்வைகளில் எவரும் அக்கறை கொள்ளவில்லை, நான் இங்கு வந்திருப்பது எமது வாசகர்கள் பெற விரும்பும் விடைகளுக்கான கேள்விகளைக் கேட்பதற்கே ஆகும். அத்துடன் நாங்கள் அமைச்சரின் திருமண நிலை தொடர்பில் விளக்கம் கோரி ஆயிரக் கணக்கான கடிதங்களைப் பெற்றுள்ளோம் எனக் கூறலாம். எனவே….?

உங்களது கேள்விக்கு விடை கிடைக்கவில்லை என நீங்கள் உணர்ந்தால் ப்ரிவருமாறு கூறலாம்: நான் அந்த விடையை முழுவதுமாகப் பின் தொடரவில்லை, அதை மீண்டும் கூற முடியுமா? அல்லது, எனது கேள்விக்கு நீங்கள் முழுமையான பதிலை வழங்கினீர்கள் என்னால் உறுதியாகக் கூற இயலாமல் உள்ளது. இவைகள் உங்களுக்கு விடை வழங்கப்படவில்லை என்பதை பணிவாகக் கூறும் முறைகளாகும். ஏனைய முறைகளில்; இந்தக் கேள்விக்கு விடையளிக்காமல் இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுக்கு இதற்கு பதில் வழங்குவதை விட்டும் எது தடுக்கின்றது? எனக்கு அந்த விடையை யார் வழங்க முடியும்?

கடினமான கேள்விகளை அணுகுவதற்கான வேறுபட்ட வழிகள் தொடர்பில் சிந்தியுங்கள். சிலவேளைகளில் கடினமான கேள்விகளைக் கேட்பதற்குரிய சிறந்த வழி அவற்றை நேரடியாகக் கேட்பதாகும். எனினும் நீங்கள் மிகவும் திறன் வாய்ந்த பேச்சாளரை சுற்றி வளைக்கும் போது, நேரடியான கேள்விகள் மறுக்கப்பட்டால், மறைமுகமான அணுகுமுறைகள் பயனளிப்பதை நீங்கள் அவதானிக்கலாம். சில பரிந்துரைகள் பின்வருமாறு; அவர்களை எச்சரியுங்கள், அத்துடன் தளம் ஒன்றை வழங்குங்கள்: சிலவேளைகளில் நீங்கள் அந்த அறிக்கைகள் பிரேரிக்கும் விடயத்தை வாசித்திருப்பீர்கள்…. வாசித்தீர்களா…..? இது ஒரு மகிழ்வான் விடயம் அல்ல என்பதை நான் அறிவேன், எனினும் எனது வாசகர்கள் நான் இதுபற்றிக் கேட்க வேண்டும் என எதிபார்க்கின்றனர்…. இந்த விடயத்தை நேராக்க எனக்கு உதவுங்கள்….. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உங்களுக்கு இதைக் கூறியது….. இது பற்றக் கருத்துக் கூற விரும்புகிறீர்களா?