1.2.1. மூலங்களின் வலைப்பின்னல் ஒன்றை உருவாக்குதல்


உங்களது செய்திக்கான சிறந்த மூலங்கள் பற்றிய ஆய்வு சிக்கல் வாய்ந்த மற்றும் முரணான அடைவுகளை வழங்கக் கூடும். உங்களுக்கு தேவையான நபர்களை அடையாளம் காணும் வரை “தொடர்புகள் மரம்” அல்லது மனதின் வரைபடம் (mind map) ஒன்றை உருவாக்குங்கள். திட்டமிடல் தொடர் செயன்முறைக்கு சான்றுகள் மற்றும் பின்புலத் தகவலக்ளைப் பெற பயன்படுத்தப்பட உள்ள மூலங்களின் பட்டியல் ஒன்றை முன்னதாகவே தயாரிக்க வேண்டும்.

உங்களது மனது வரைபடத்தில் மூலங்ககளை இணைக்க அம்புக் குறிகளைப் பயன்படுத்துவதுடன் அவற்றுக்கு துணைபுரியும் பின்புல நிபுணத்துவத்தை உங்களது கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறிப்பிடுங்கள். ஏனைய வகை தொடர்புகளை வரையுங்கள் – உதாரணமாக முரண்படும் அல்லது புதிரான விடயங்களை தரும் சான்றுத் துண்டுகளை துண்டுபட்ட கோடுகளால் இணையுங்கள். முரண்பாடுகள் அனேகமாக மிகவும் பயன் தரக் கூடியவை, அவற்றைத் தேடுங்கள், தொடர்ச்சியாக “ஏன்” என்ற கேள்வியை கேட்டுகொண்டே இருங்கள். அதன் மூலம் உங்களது செய்தி யோசனைக்கு கால்கள் மாத்திரமல்ல சிறகுகள் கூட முளைப்பதை நீங்கள் காண்பீர்கள். எனினும் புலனாய்வுக்கு அதிக நேரம் தேவைப்படுவதோடு அதிக பொறுமையும் அவசியமாகும். ஒருவர் இலகுவில் ஏமாற்றமடைய நேரிட்ட போதும் விடயத்தில் கவனக் குவிவுடன் இருப்பது முக்கியமானது. அத்துடன் சமூகத்தின் காவல் நாயாக இருப்பது மற்றும் குரலற்றவர்களுக்கு குரல் வழங்குவது என்ற ஊடகத்துறையின் அடிப்படை வகிபாகத்தினால் எப்போதும் வழிகாட்டப்பட்டவராக இருக்க வேண்டும்.

மார்க் ஹன்டர் மற்றும் லூக் சென்கர்ஸ் ஆகியோர் வினைத்திறன் மிக்க தகவல் வரைபடம் தயாரிப்புக்கு மற்றும் செய்தி தகவல்களை ஒழுங்குபடுத்தி வைத்துக் கொள்ளல் தொடர்பில் பின்வரும் குறிப்புகளை வழங்கியுள்ளனர்.

  • நிகழ்வுகளை விபரிக்கும் காலவரிசை ஒன்றை உருவாக்குதல் (திகதிகள், இடங்கள், அங்கே யார் இருந்தனர், என்ன கூறப்பட்டது, என்ன செய்யப்பட்டது); இந்த தகவல்களை ஒரு தொடர்ச்சியான வடிவமைப்பில் வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான தகவலை உடனடியாக அதில் இருந்து எடுக்க முடியும்.
  • உங்களது மூலங்களின் பட்டியல் ஒன்றை அவற்றின் தொடர்பு விபரங்களுடன் தயாரிக்கவும் (இந்த தகவல்களை பாதுகாப்பாக வைக்கவும்)
  • உங்களது திட்டம் பற்றி சில விடயங்களை அறிந்தவர்கள் மற்றும் நீங்கள் இன்னும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களை அவர்களது தொடர்பு விபரங்களுடன் கொண்ட மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் பட்டியல் ஒன்றை உருவாக்குங்கள்.
  • இதனுடன் தொடர்புடைய வேறுபட்ட நபர்களின் இடையான உறவுகளை படங்களாக
  • உங்களிடம் உள்ள மற்றும் இன்னும் தேவைப்படக் கூடிய முக்கிய ஆவணங்களின் பட்டியல் ஒன்றை உருவாக்குங்கள்
  • உங்களது ஆவணங்களுக்கு சுட்டெண்களை இடுங்கள் அத்துடன் நீங்கள் கணணியுடன் பணியாற்றுபவர் ஆயின் அனைத்து இலத்திரனியல் கோவைகளுக்கும் ஹைபர் டெக்ஸ்ட் இணைப்புகளை உருவாக்குங்கள்
  • நீங்கள் உறுதியாக கட்டி எழுப்பி உள்ள யதார்த்தங்களை கோடிட்டுக் காட்டுங்கள்
  • உங்களிடம் உள்ள ஏனைய தகவல்களின் நிலைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
  • யோசனைகளைக் குறித்து வைக்க எப்போதும் குறிப்புப் புத்தகம் ஒன்றை வைத்திருங்கள்