2.1.2. அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைக் கையாளுதல்

2.1.2. அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைக் கையாளுதல்


உங்களது செய்தியில் உள்ள குற்றவாளி மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் அபாயமான நபராகவும் இருப்பின் அவருடன் நேரடி சந்திப்புகளை நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம். மாற்றமாக கேள்விகளை அவனது அல்லது அவளது அலுவலகத்துக்கு அனுப்ப முடியும். அவர்களது எல்லைக்குள் நீங்கள் நுழையாமல் இருப்பது மற்றும் உங்களது முகத்தை அவர்களது அணியினருக்கு பரிச்சியமாக்காமல் இருப்பது சிறந்தது. இந்த வகையான நேர்காணல்கள் மிகவும் சிறந்ததாகக் காணப்பட்ட போதும், குறைந்த பட்சம் செய்தியை எழுதுவதற்கு உயிருடன் இருப்பீர்கள்.

அவ்வாறான செய்திகளைத் தொடங்கும் முன்னர் உங்களது பதிப்பகம் அல்லது நிறுவனம் உங்களுக்கு வழங்கக் கூடிய ஆதரவு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கண்டறியுங்கள். நீங்கள் ஒரு தன்முயற்சி (freelancer) ஊடகவியலாளர் எனின் உங்களது சொந்த பாதுகாப்பு உதவிக் கட்டமைப்புகளை உருவாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சக்தி மிக்க நபர் அல்லது நிறுவனம் ஒன்றிடம் பாரிய பிரச்சனைகள் பற்றி கருத்தூட்டங்களைக் கேட்பது சட்ட மற்றும் உடலியல் ரீதியான அச்சுறுத்தல்களை உருவாக்கும். சட்ட ரீதியான அச்சுறுத்தல்கள் உங்களது செய்தி ஆசிரியர் செய்தியைக் கைவிட வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் – அவன் அல்லது அவள் அவ்வாறு செய்யக் கூடும். எனினும் உங்களது உண்மைகள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த தனி நபர்கள் அநேகமான சந்தர்ப்பங்களில் தாங்கள் மேற்கொள்ளப்போவதாகக் கூறும் மான ந~;ட வழக்குகளை மேற்கொள்வதில்லை என்பதைக் கூறி உங்களது செய்தி ஆசிரியரை சம்மதிக்க வையுங்கள். முதலாவதாக, அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ள தீய பிரசித்தம் அவர்களது வழக்கை நலிவாக்கும் (இது ஆயுத விற்பனையுடன் தொடர்புடைய கம்பனிகள் போன்றவற்றுக்கு பொதுவானது. அத்துடன் இரண்டாவது ஒரு நீதி மன்ற வழக்கு அவர்கள் மறைக்க நினைக்கும் சான்றுகள் அனைத்தையும் நீங்கள் அனைத்தையும் சுதந்திரமாக மீளக் கொண்டுவரக் கூடிய சலுகை மிக்க சூழமைவை வழங்கும். நீங்கள் மிரட்டல், குற்றம் சாட்டுதல் அல்லது ஏனைய ஏதாவது ஒரு வகை அச்சுறுத்தலை மேற்கொள்ளும் தனி நபர்களுடன் இயங்கிக் கொண்டிருந்தால் “ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to protect journalists)” அல்லது எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters without borders) போன்ற உதவிகளை பெற நோக்குங்கள்.

அபாயத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவும் அமைப்புகள் பற்றிய இன்னொரு மேல்நோக்கு இந்த இணைய இணைப்பில் உண்டு: Global Investigative Journalism Network (GIJN).


தகவல்மூலங்களை மீளாய்வு செய்து தேர்ந்தெடுத்த பின்னர் மற்றும் குறித்த தகவல் மூலங்களை சந்திப்பதில் உள்ள அபாயத்தை கருத்தில் கொண்ட பின்னர், இது நேர்காணலை நடத்துவதற்கான நேரமாகும். அடுத்த அத்தியாயம் நேர்காணல் கேள்விகளை எவ்வாறு திட்டமிடுவது, நேர்காணலின் போது எவ்வாறு நடந்து கொள்வது மற்றும் வெற்றிக்கான முக்கிய விதிகள் தொடர்பில் கலந்துரையாடும்.